6 ஆல் ரவுண்டர்கள் உடன் ரெடியானது சிஎஸ்கே playing xi.. இந்த வருடம் அதிரடி சரவெடி தான்

6 ஆல் ரவுண்டர்கள் உடன் ரெடியானது சிஎஸ்கே playing xi.. இந்த வருடம் அதிரடி சரவெடி தான்

ஐபிஎல் மினி ஏலம் 2023 நேற்று கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக சாம் கரனை பஞ்சாப் அணி ரூ.18.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. அவருக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கேமருன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸை சி.எஸ்.கே. ரூ. 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது.

சிஎஸ்கே ஐபிஎல் ஏலத்தில் 7 வீரர்களை ஏலத்தில் உள்ளது. அவர்களில் முக்கியமான வீரராக பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் உள்ளனர். மேலும் ரஹானே, நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷித், அஜய் மண்டல், பகத் வர்மா ஆகியோரையும் சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஐபிஎல் கோப்பையை 4 முறை( 2010, 2011, 2018 மற்றும் 2021) வென்றுள்ளது. கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் போட்டிகள் உடன் வெளியேறியது. தோனி தனது சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை கடந்த ஐபிஎல் தொடரில் ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் ஜடேஜா கேப்டன் பொறுப்பில் சரியாக ஜொலிக்க முடியாமல் திணறியதால் மீண்டும் கேப்டன் பொறுப்பு தோனியிடம் சென்றது.

சிஎஸ்கே லீக் சுற்றுடன் வெளியேறிய போது அடுத்த சீசனில் சிஎஸ்கே வலிமையான அணியாக மீண்டும் களமிறங்கும் என்று தோனி தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியதும் அடுத்த கேப்டனாக யார் என்ற குழப்பம் இருந்து வந்த நிலையில் தான் சிஎஸ்கே பென் ஸ்டோக்ஸை போட்டி போட்டு ஏலத்தில் எடுத்துள்ளது. இதனால் தோனிக்கு பின் பென் ஸ்டோக்ஸ் சிஎஸ்கே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
news18


 


Post a Comment

Previous Post Next Post