போதைப் பொருள் பாவனை எதிகால சந்ததியினரை கூண்டோடு அழித்துவிடும்.

போதைப் பொருள் பாவனை எதிகால சந்ததியினரை கூண்டோடு அழித்துவிடும்.


இலங்கையில் அரசியல் புரட்சி முடிந்து மீண்டும் ஒரு பரட்சிக்கு மக்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அது போதைபொருளுக்கு எதிரான புரட்சி 

அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பல்வேறு தரப்பினரும் அபாய அறிவிப்பை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக இந்த செயற்பாட்டில் மாணவர்களும் ஈடுபட்ட சம்பவங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன.

நாட்டில் நிலவும் சூழலைப் பயன்படுத்தி இந்த போதை மருந்து வியாபாரம் நடைபெருகின்றதாக தெரிவிக்கப் படுகின்றது.

பொருளாதார சிக்களில் தவிக்கின்ற குடும்பங்களிலிருந்து வரும் மாணவ மாணவிகளை இலக்கு வைத்து இந்த போதை மருந்து வியாபாரம் நடை பெறுகின்றது.

அன்றாட வாழ்க்கை செலவுகள் விண்ணைத் தொட்டு செல்கின்றது.அரசியல்வாதிகள் பாராளுமன்றமே கதி என்று போவதும் வருவதுமாய் இருக்கின்றார்கள் .அவர்களுக்கு நாட்டு மக்கள் எப்படி வாழ்ந்தால் நமக்கு என்ன பிரச்சினை என்ற எண்ணம் .நாடு சீரழிந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது.

நாட்டை எப்படி மீட்டெடுப்பது என்று தெரியாமல் தடுமாறுகின்ற ரணில் அரசு.

கஞ்சா மூலம் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முயல்கின்ற பரிதாபம் .விபச்சாரத்தை அங்கீகரிக்கும் அறிவுகெட்ட பாராளுமன்ற கழுதைகள்.

இப்படி கேடுகெட்டதொரு அரசாங்கத்தை நாம் எங்குமே பார்த்ததில்லை .எதிர்கால சந்ததியினரை நினைத்தால்தான் பரிதாபம் .

இலங்கை ஒரு இருண்ட கண்டத்திற்குள் நுழைகின்றது.மீண்டும் மீண்டு வருமா என்ற சந்தேகம் நாட்டில் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் எழுந்துள்ளது.

ரணிலின் பலியெடுக்கும் கொடூர எண்ணத்தால் நாடு மிக மோசமான நிலைக்குச் செல்கின்றது.உலக நாடுகள் உதவ முன் வராத நிலையில் இந்தியா உதவுகின்றது.

பண உதவிகளும் அதே நேரம் பா ஜ க கொள்கைகளையும் இலங்கைக்குள் திணிக்கின்றது.

சிறுபான்மையின மக்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை திணிப்பது முதல் ,மக்களை மடையர்களாக வைத்திருப்பது போன்ற நிலைமையை இலங்கைக்குள் திணிப்பது மோடியின் மிக மோசமான திட்டங்களில் ஒன்றாகும் .

மோடியின் குஜாரத் போன்றதொரு நிலைமை இலங்கைக்குள் இருந்தால் தற்போதைய அரசை எவராலும் வீழ்த்த முடியாத ஒரு நிலை உருவாகும்.

ஆகவே கல்வியைப் பற்றியோ அல்லது வருமானத்தைப் பற்றியோ சிந்திக்க மக்களுக்கு இடமளிக்காமல் போதை மருந்து பாவனை ,கற்பழிப்புக்கள்,கொலை கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்களை குஜாராத் அரசு பெரிதாக கண்டுகொள்வதில்லை.கட்டுபடுத்தும் நோக்கமும் இல்லை.

குஜராத் மாடல் இலங்கையிலும் அமைக்க மோடி அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.அதற்கு தகுந்தாற்போன்று ரணில் அரசும் இயங்குவதைக் காணக் கூடியதாயுள்ளது.
 
இந்த நிலையில் பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் இருந்தே இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குறித்த சிற்றுண்டிச்சாலையிலிருந்து 07 பைக்கட் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 38 போதைவில்லைகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சிற்றூண்டிசாலையை நடத்தி வந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

போதைபொருள் பாவனை இன்று மாணவர்களிடையே சர்வ சாதரணமாக பழக்கத்தில் வந்துவிட்டது.இது நாட்டுக்கு மிகப்பெரும் ஒரு அபாய எச்சரிக்கையாக நாம் கருதவேண்டும் .இனிவரும் நாட்கள் மிகவும் கடினமாக இருக்கும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றார்கள் .அதற்கு பெற்றோர்கள் முன் வரவேண்டும் 

பிள்ளைகள் போதைபொருள் பாவனையில் இருப்பது தெரிந்தால் உடனே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் .தகுந்த தண்டனைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் .அது மரண தண்டனையாக இருந்தாலும் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை அடைய வேண்டும்.

போதைப் பொருள் பாவனை எதிகால சந்ததியினரை கூண்டோடு அழித்துவிடும்.

இலங்கைபோன்ற நாடுகளின் அரசில்வாதிகள்  மக்களை எந்தவிதத்திலும் பலிகொடுக்க தயங்க மாட்டார்கள்.ஆகவே பெற்றோர்கள் இந்த விடயத்தில் முழுக் கவனம் செலுத்துவது மிக மிக அவசியம் .

கல்ஹின்னை மாஸ்டர் 



 


Post a Comment

Previous Post Next Post