
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, முடிந்தால் நாட்டுக்காக ஒன்றிணைய முடியும் என தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உதவியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அதிபரானார் எனவும் அதன் காரணமாகவே இரு கட்சிகளுக்கும் இடையில் சில உறவுகள் உருவாகியுள்ளதாகவும் காரியவசம் தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலத்திற்காகவும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காகவும் தொடர்ச்சியான கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் காரியவசம் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டின் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருப்பதால், அவ்வாறானதொரு கட்சியுடன் இணைவதும் அக்கட்சிக்கு பலமாகும் எனத் தெரிவித்த காரியவசம், நாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக எந்தக் கட்சியுடன் முன்னோக்கிச் செல்லக் கூடியதோ அந்த கட்சியுடன் இணைந்து முன்னேறத் தயார் எனவும் தெரிவித்தார்.
நாட்டின் மற்றும் மக்களின் தேவைகளுக்கு அமைய ஒரு கட்சியின் கொள்கைகள் மாறாவிட்டால் அந்த அரசியல் கட்சி இருக்காது என தெரிவித்த செயலாளர், இலங்கையின் பழமையான இடதுசாரி அரசியல் கட்சிகளே அதற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன கொள்கைகளை மாற்றாத நிலையில் இல்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறான நிலையில் இல்லை எனவும் நாட்டின் நன்மைக்காக இரு கட்சிகளுக்கும் பொறுப்பு இருப்பதாகவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments