Ticker

6/recent/ticker-posts

பணத்தை திருடி விட்டு , திருடர்கள் தன்னைத் தாக்கியதுபோன்று நாடகமாடிய பணிப்பெண்

முதலாளியிடமும் உடன் வேலைபார்த்த பணிப்பெண்ணிடமும் பணம் திருடிய 45 வயது இல்லப் பணிப்பெண்ணான கொன்ஸாலஸ் அமோர் கோய் (படம்), திருடர்கள் கதவை உடைத்துவந்து தன்னைத் தாக்கியதுபோன்ற தோற்றத்தை உருவாக்கத் தனது கழுத்திலும் முதுகிலும் கத்திரிக்கோலால் காயங்களை ஏற்படுத்திக்கொண்டார்.

பிலிப்பீன்சைச் சேர்ந்த இவரின் குட்டு, காவல்துறையின் மோப்ப நாய் மூலம் வெளிப்பட்டது. வீட்டில் திருடியது, காவல்துறையிடம் தவறான தகவல் தந்தது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டதை அடுத்து இவருக்கு பத்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை விதிக்கும்போது மற்றொரு திருட்டுக் குற்றமும் கருத்தில் கொள்ளப்பட்டது. இவ்வாண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி அதிகாலையில் நாடகமாடி இவர் திருடிய நகைகளின் மொத்த மதிப்பு $11,000 எனக் கூறப்பட்டது.


 


Post a Comment

0 Comments