Ticker

6/recent/ticker-posts

வாட்ஸ்அப் டீபியை மார்பிங் செய்து ஃபேஸ்புக்கில் அப்லோட்.. பணம் கேட்டு மிரட்டிய இளைஞர் கைது...

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது குடும்ப புகைப்படத்தை வாட்ஸ்அப் டீபி ஆக வைத்திருந்திருக்கிறார். அந்த புகைப்படத்தை அடையாளம் தெரியாத நபர் திருடி எடிட் செய்து அதை முகநூலில் பதிவிட்டு, அதனை நீக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் சேலம் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சேலம் மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் கார்த்திக்கிடம் பணம் கேட்டு மிரட்டியது தூத்துக்குடியைச் சேர்ந்த சரத்குமார்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து சரத்குமாரிடம் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் பல தொலைபேசி எண்களை ரேண்டம் முறையில் தனது மொபைல் போனில் பதிவு செய்து, அதில் எந்த எண்ணில் பெண்களின் போட்டோ உள்ளதோ அதை எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டு மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்தது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுமக்கள் வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகளை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும். புகைப்படங்களை லாக் செய்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
news18



 


Post a Comment

0 Comments