
பின்பக்கமாகவும் கொள்ளையர்களே அமர்ந்துள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வர்த்தகர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைமைக்கு வந்துள்ளனர். பதுளையில் சிறப்பாக வர்த்தகச் செயற்பாடுகளை முன்னெடுத்த வர்த்தகர் ஒருவர் நாட்டின் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளால் அவரது சொத்துகளை வங்கியில் வைத்து கடனைப் பெற்றுகொண்டுள்ளார். இவ்வாறான நிலையில் தற்போது அவரது வீடு உள்ளிட்ட சொத்துகளை வங்கி ஏலத்தில் விடுவதற்கு தயாராகியுள்ளார் என்றார்.
இதுபோன்ற வர்த்தகர்கள் வங்கிகளை ஏமாற்றுபவர்களோ கொள்ளையர்களோ கிடையாது. ஜனாதிபதி, பிரதமரின் இரு பக்கங்களும், அவர்களுக்குப் பின்னாலும் கொள்ளையர்கள் அமர்ந்திருக்கிறார்கள். வங்கிக்கடனைப் பெற்று செலுத்த முடியாத நிலைக்கு வந்துள்ள பதுளை வர்த்தகர் போன்ற இன்னும் பலர் இவர்களைப் போன்ற கொள்ளையர்கள் அல்லர். உண்மையில் அவர்கள் நேர்மையானவர்கள் எனவும் தெரிவித்தார்.
எனவே, பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு சொத்துகளை வங்கிகள் உடமையாக்கிக் கொள்வது தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும் எனவும் இதன்போது அநுரகுமார எம்.பி கோரிக்கை விடுத்தார்.
அரசாங்கங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச தொழில்களை வழங்கியுள்ளது. நல்லாட்சிக் காலத்தில் டெங்கு ஒழிப்புச் செயலணி உருவாக்கப்பட்டு அதில் 1,500 பேரை இணைத்துகொண்டனர். இவர்களுக்கு வெறும் 20 ஆயிரம் ரூபாய் சம்பளமே வழங்கப்படுகிறது. அதுபோல தற்போதைய அரசாங்கம் அரச தொழில் வழங்கியவர்களுக்கும் 22 ஆயிரம் ரூபாயே வழங்கப்படுகிறது என்றார்.
tamilmirror
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments