
இதனால் அந்த இளைஞர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "யூடியூப் சேனல்களில் வரும் ஆபாச விளம்பரங்களால் என்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால்தான் நான் தேர்வில் தோல்வியடைந்தேன். எனவே அதற்கு கூகுள் நிறுவனம் ரூ. 75 லட்சம் இழப்பீடு தர வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தேவையற்ற வழக்கு என கூறியுள்ளனர். மேலும் விளம்பரம் பிடிக்கவில்லையென்றால் அவற்றைப் பார்க்க வேண்டாம். மாறாக சுய விளம்பரங்களுக்காக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக ஆனந்த் கிஷோர் செளத்ரி ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கு அந்த இளைஞரும், தான் வேலைக்கு செல்லவில்லை என்பதால் தன்னிடம் போதிய பணம் இல்லை. எனவே தன்னை மன்னித்து விடும்படி வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை ஏற்காத நீதிமன்றம், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்தற்காக இளைஞருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
'Youtube விளம்பரங்களால்தான் நான் தேர்வில் தோல்வியடைந்தேன்' என்று கூறி 75 லட்சம் இழப்பீடு கேட்ட மும்பை இளைஞருக்கு, 25,000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kalaignarseithigal
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments