
வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட பொழுது வாகனத்தின் உள்ளே காலியாக இருந்தது. இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். வாகனத்தின் உள்ளே சென்று பார்த்த பொழுது வாகனத்தின் வெளிப்புறம் இருந்த நீளத்திற்கும் உள்புறம் இருந்த நீளத்திற்கும் வித்தியாசம் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை முழுவதுமாக சோதனையிட்டனர். அதில் வாகனத்தின் உட்புறம் 3க்கு 8 அடி என்ற அளவில் ரகசிய அறை அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த அறையை திறந்து பார்த்த பொழுது உள்ளே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டையாக இருந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கண்டெய்னர் லாரி திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையை சேர்ந்த டைட்டஸ் என்பவருக்கு சொந்தமானது, ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கியது, இந்த பதிவு எண் வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து 23 லட்சம் மதிப்பிலான 300 கிலோ குட்கா மற்றும் கண்டெய்னர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குட்காவை கடத்தி செல்வதற்காகவே கண்டெய்னர் லாரி வாங்கப்பட்டு அதில் ரகசிய அறை அமைத்ததும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஓட்டுனர் லோகேஸ்வரனைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருந்த டைட்டஸ் நபரை தேடி வருகின்றனர். கடத்தலுக்காக புதிய கண்டெய்னர் லாரி வாங்கி அதில் ரகசிய அறை அமைத்திருப்பது போலீசாரிடம் மட்டுமின்றி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
SOURCE;kalaignarseithigal
0 Comments