தோல்வியின் போதும் துவண்டுவிடாத மொரோக்கோ அணி!

தோல்வியின் போதும் துவண்டுவிடாத மொரோக்கோ அணி!


ஒரு மனிதனின் மரணம் எப்போது நிகழும் என்பதை எவராலும் எப்படிமே அறிய முடியாத ஒன்றாக இருப்பதுபோலவே, போட்டி என்று வருகின்றபோது வெற்றி - தோல்வி என்பதையும் எவராலும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது!

கத்தார்-2022 காற்பந்தாட்டத் தொடரில் 32 அணிகள்  மோதின. 25 நாட்கள் மோதல்கள் இடம்பெற்றுவந்த நிலையில், இறுதிவரைக்கும் யார் வெற்றிக் கிண்ணம் தூக்குவர்  என்பது எவருமே அறியாத ரகசியமாகும்! இதைத்தான் 'இறை நியதி' என்பது!


இம்முறை மத்தியகிழக்கு, அரபு - முஸ்லிம் நாடான கத்தாரில் 2022  கால்பந்தாட்டப் போட்டியின் வெற்றிக்கிண்ணப் போட்டி நிகழ்வுகள்  நடைபெற்று வருகின்றன.


நூற்றாண்டுக்கு முன்னர், சிறியதொரு வளைகுடா நாடான கத்தார், 30 லட்சம் மக்களையும், 12,000 கிலோ மீட்டருக்கும் குறைவான குடியிருப்புக்கு ஒவ்வாத நிலத்தையும்  கொண்டிருந்தது. மீனவர்களையும், முத்துக் குளிப்பாளர்களையும் குடியிருப்பாளர்களாகக்  கொண்டிருந்த அது, இவர்களுள்  பெரும்பாலானோர் அரேபிய தீபகற்பத்தின் பாலைவனங்களிலிருந்து நாடோடிகளாக வந்து குடியேறியோர்களுமாவர்!

காலம் செல்ல,  அடிப்படையில் சிறிய நாடாக இருந்தாலும், உலக அளவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தைச் செலுத்தத் தொடங்கியபோது, வளைகுடா நாடுகளிற்சில, கத்தாரை ஓரங்கட்ட ஆரம்பித்தன. குறிப்பிட்ட சில நாடுகள் தமது கத்தாருடனான தமது உறவுகளைக்கூடத்  துண்டித்துக் கொண்டன!

இருந்தபோதிலும் அல்லாஹ்வின் நாட்டமே தற்போதைய கத்தாரை உலகின் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளம் கொண்ட நாடாகத் திகழ வைத்துள்ளது. இது தனி நபர் வருமான அடிப்படையில் உலக நாடுகளிடையே முதலிடம் வகிப்பதோடு,  ஐக்கிய நாடுகள் அமைப்பு இதனைச் சிறப்பான மனிதவள வளர்ச்சியடைந்த நாடாகவும், அரபு நாடுகளிடையே  அதிக முன்னேற்றம் கண்ட நாடாகவும் கருத்து வெளியிட்டுள்ளது!

கத்தாரின் அமோக வளர்ச்சியும், அதன் தைரியமும் 2022-உலகக்கிண்ணக் காற்பந்தாட்டப் போட்டித் தொடரின் 22வது தொடரை, முற்றிலும் இஸ்லாமிய விழுமியங்களுக்குள் -  பிரசாரப் பின்னணியை இலக்காகக் கொண்டு  நடாத்தும் துணிச்சலை அதற்குக் கொடுத்துள்ளது!

பொதுவாக  அரேபியர் ஏனைய விளையாட்டுக்களை விடவும்,  காற்பந்தாட்டத்தில்  அதிக ஈடுபாடும், ரசனையும் கொண்டோராவர்; இறைவன் அவர்களது ரசனைக்கு ஒரு காலக்கெடு தந்திருந்தான்! அதனை இப்போது அவன் மெதுவாக நழுவவிட்டுள்ளமைதான் மொரோக்கோ அணியினரின் தோல்வியின் ரகசியமாகும்!

மொரோக்கோ அணியின் பலம் அதன் காப்பக நுட்பமும், சிறந்த 'கோல் கீப்பரை'க் கொண்டிருப்பதுவுமாகும்.  அதன் காப்பக நுட்பமும்,  முறியடித்து 'கோல்' போட்டுக்கொள்ள முடியாமல்  பல அணிகள் திணறிப்போனதை, முந்தைய ஆட்டங்களின்போது அவதானிக்க முடிந்தது!

இருந்தபோதிலும், இறைவனின் நாட்டம்; நடைபெற்றுமுடிந்த இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், நடப்பு சம்பியனான பிரான்ஸிடம்,  மொரோக்கோ   தோல்விகாண வேண்டும் என்பதாகும்!


வெற்றியின்போது இறைவனுக்கு சிரம்பணிந்து நன்றிசெலுத்திய மொரோக்கோ அணி,  தோல்வியின்போதுகூட துவண்டு விடாமல், சிரம்பணிந்து  இறைவனுக்கு நன்றி  செலுத்தியதை உலக மக்கள் வியந்து பார்த்தனர்!

இதன் மூலம்  மொரோக்கோ  அணியினர் காற்பந்தாட்ட ரசிகர்களின் இதயங்களை வென்று விட்டனர்!

2018ம் ஆண்டு பிரான்ஸ் அணி  பெல்ஜிய அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததுபோல்,  இன்று மொரோக்கோ அணியைத்  தோற்கடித்து, அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளது!

2022 திசம்பர் 18ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டினா அணியுடன் பிரான்ஸ் அணி மோதும்!


 


Post a Comment

Previous Post Next Post