கதிர்வீச்சுகளில் பலவகை உண்டு
நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் எதுவென்றால். கதிர்வீச்சில் பலவகை உண்டு. நிறைய ஆற்றலைக் கொண்ட எக்ஸ்-ரே கதிர்களும் அதில் அடங்கும். அதற்கு டி.என்.ஏ-க்களை உடைக்கும் அளவுக்கு ஆற்றல் உண்டு. ஆனால் மருத்துவ உலகில் அது எந்தளவுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த அளவீட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வரிசையில் மைக்ரோவேவ்ஸ் என்கிற நுண்ணலைகள்,ரேடியோ அலைகள் மற்றும் நாம் பார்க்கக்கூடிய ஒளி ஆகியவை அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சாகும். இதுதான் புற்றுநோய் பாதிப்புக்கான அபாயத்தை அதிகரிக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் ஒரே அயனியாக்கம் செய்யாத கதிர்வீச்சு புற ஊதா கதிர்கள் ஆகும், அதனால்தான் மக்கள் சன்ஸ்கிரீன் அணிந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மொபைல் போன்கள்
அதிர்வெண் மற்றும் ஆற்றல் அதிகமாகவும், அலைநீளம் குறைவாகவும் இருந்தால், நோய் பாதிப்பு அதிகம். இதற்கு காமா கதிர்கள் மற்றும் எக்ஸ்- கதிர்களை உதாரணமாக கூறலாம். அதிர்வெண் மற்றும் ஆற்றல் படிப்படியாக குறைந்து கடைசி ரேடியோ அலைக்கு அலைநீளம் அதிகரிக்கிறது. அந்த இடத்தில் தன மைக்ரோவேவ் உள்ளது. அலைநீளத்தில் நீளமாகவும், அதிர்வெண் குறைவாகவும் இருப்பதால் இவை ஒப்பீட்டளவில் தீங்கற்றவை. மொபைல் போன்கள் போன்றவை ரேடியோ அலைகளின் அடிப்படையில் செயல்படுகின்றன. இது அயனியாக்கம் செய்யாதது. அதாவது புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தாது. அதுதான் மொபைல் டவர்களுக்கும் செல்கிறது.
மைக்ரோவேவ்
மேலும் மைக்ரோவேவ் பயன்படுத்துவதாலும் புற்றுநோய் அபாயம் ஏற்படக்கூடுமோ என்கிற அச்சம் பரவலாக உள்ளது. இந்த கருவியிலும் பாதிப்பில்லாத கதிர்வீச்சு தான் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் மைக்ரோவேவ் சமையல் முற்றிலும் பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் அலைகள் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்காது. எனினும் மைக்ரோவேவ் செயல்பாட்டில் சில முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். மைக்ரோவேவ்வில் மிகவும் பாதுகாப்பான தரமான சமையல் பாத்திரங்களில் சமைக்க வேண்டும். இது தவிர, தரம் குறைந்த சமைப்பதால் பாதிப்பு ஏற்படும். பொதுவாக மைக்ரோவேவ் சமையலுக்கு காஸ்ட் அயர்ன் சமையல் பாத்திரங்கள் பலராலும் பரிந்துரைக்கப்படுகின்றன.
asianetnews
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments