Ticker

6/recent/ticker-posts

Ad Code



நடந்து முடிந்த உலகக் கோப்பையில் மெஸ்ஸியின் சாதனைகள்

நடந்து முடிந்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடியதன் மூலம் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். உலகக் கோப்பை கால்பந்தில் 26 ஆட்டங்களில் பங்கேற்று அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனைக்கு மெஸ்ஸி சொந்தக்காராகியுள்ளார். மேலும், உலகக் கோப்பை கால்பந்தில் மெஸ்ஸி 19 ஆட்டங்களில் கேப்டனாக அணியை வழிநடித்தி அதிக போட்டிகளில் கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அதோடு இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பையில் மெஸ்ஸி 2,314 நிமிடங்கள் களத்தில் விளையாடி இத்தாலியின் பாவ்லோ மால்டினியின் (2,217 நிமிடங்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.இதுவரை 5 உலகக்கோப்பையில் விளையாடியுள்ள மெஸ்ஸி அனைத்து தொடர்களிலும் சக வீரர் கோல் அடிக்க அசிஸ்ட் செய்து எந்த வீரரும் படைக்காத பெரும் சாதனையை படைத்துள்ளார்.

மேலும், உலகக்கோப்பையில் ரவுண்டு ஆஃப் 16 போட்டி, காலிறுதி போட்டி, அரையிறுதி போட்டி, இறுதிப்போட்டி என நாக் அவுட் போட்டிகளில் அனைத்திலும் கோல் அடித்து இந்த சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், உலகக்கோப்பை தொடரில் இரண்டு முறை தொடரின் நாயகனுக்கு வழங்கப்படும் 'தங்க கால்பந்து' விருதை பெற்று உலகசாதனை படைத்துள்ளார். மேலும் சர்வதேச தொடர்களில் அதிக கோல் அடித்த (26 கோல் ) தென் அமெரிக்க கால்பந்து வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


 


Post a Comment

0 Comments