Ticker

6/recent/ticker-posts

ஒரு கோடி சம்பளம் வாங்கும் ஊழியர் தனக்கு கொஞ்சம் வேலை தாருங்கள் எனக் கேட்ட சம்பவம் ...

ஒரு கோடி சம்பளம் வாங்கும் ஊழியர் தனக்கு கொஞ்சம் வேலை தாருங்கள் எனக் கேட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

அயர்லாந்தைச் சேர்ந்தவர் அலஸ்டர் மில்ஸ். இவர் ரயில் நிறுவனமான் ஐரிஷ் ரயில் அலுவலகத்தின் நிதி நிர்வாகியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு வருடம் ரூ.1.03 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக இவருக்கு அன்றாட வேலைகள் எதுவும் பழங்கப்படுவதில்லையாம். இதனால் அவர், ரயில் நிறுவனத்தின் தலைமைக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

தினம் 2 செய்தித்தாள்கள் மற்றும் கொறிப்பதற்கு ஏதாவது வாங்கிச் செல்வேன். வாசிப்பதும், சாப்பிடுவதும் தவிர்த்து அலுவலக மேஜையில் எனக்கு வேலை எதுவும் இருக்காது. தினசரி பணிகளின் பொருட்டு பணியாளர்களுக்கு நித்தம் ஏராளமான மெயில்கள் வரும்.

நானும் நாளெல்லாம் கம்யூட்டர் திரையை வெறித்தபடி அமர்ந்திருப்பேன். எனது மேலதிகாரிகள், சக அலுவலர்கள், இதர தகவல் தொடர்புகள் உட்பட அலுவல் சார்ந்து எந்த மெயிலும் எனக்கு வராது. ஆனால் மாதாந்திரம் ஊதியம் மட்டும் வந்து விடுகிறது.

வேலை பார்க்காது ஊதியம் பெறுவது என்னை குற்ற உணர்ச்சியில் தள்ளுகிறது’ என வேதனை தெரிவித்துள்ளார். ஐரிஷ் ரயில் நிறுவனம் தனது ஊழியர் மில்ஸ் தெரிவிக்கும் புகார்களை மறுத்திருக்கிறது.


 


Post a Comment

0 Comments