Ticker

6/recent/ticker-posts

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?....!பின்னணியில் பா.ஜ.க...தொல். திருமாவளவன்

ஈழத்தமிழர் பிரச்சினையில் வேறு நோக்கத்தோடும், சிங்கள அரசாங்கத்தை அச்சுறுத்தும் நோக்கோடும் சில செயற்பாடுகளை பா.ஜ.க அரசாங்கம் மேற்கொள்வதாக தெரிகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என கேள்வியெழுப்பப்பட்ட போதே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன், நலமாக இருப்பதாக அண்மையில் பழ. நெடுமாறன் செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

இந்திய அரசாங்கம் அல்லது இந்திய அரசாங்கத்தின் உளவுத்துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் இருந்து செயற்படுகிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இந்த அறிவிப்பில் காலப் பொருத்தமும் இல்லை, அரசியல் பொருத்தமும் இல்லை. ஏன் இப்போது பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று சொல்ல வேண்டிய தேவை எழுந்தது.

அப்படியே அவர் உயிருடன் இருந்தாலும் இப்போது சொல்ல வேண்டிய தேவை என்ன? ஆனால் ஒன்று வெளிப்படுகிறது. இந்திய பாஜக அரசு ஈழத் தழிழர் பிரச்னையை வேறு நோக்கத்தோடு, சிங்கள அரசை அச்சுறுத்தும் நோக்கோடு தலையிடுவதாக தெரிகிறது.

இந்திய அரசு அல்லது உளவுத் துறை இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.” என தெரிவித்தார்.  




 


Post a Comment

0 Comments