Ticker

6/recent/ticker-posts

Chruch Vandalise:கிறிஸ்துமஸ் முடிந்த 2 நாளில் கர்நாடகாவில் தேவாலாயம் சூறை!குழந்தை இயேசு சிலை உடைப்பால் பதற்றம்


கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள பெரியபட்னா நகரில் அடையாளம் தெரியநபர்கள் சிலர், புனித மேரி தேவாலயத்துக்குள் புகுந்து அடித்து, நொறுக்கி நேற்று சூறையாடியுள்ளனர். 

அங்கிருந்த குழந்தை இயேசு சிலையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். ஆனால், பிரதானமான இயேசு சிலைக்கு எந்த சேதமும் இல்லை. 

கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்து இரு நாட்களுக்குள் தேவாலயம் சூறையாடப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது, பதற்றம் ஏற்பட்டுள்ளதால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தேவாலயத்துக்குள் புகுந்து தாக்குல் நடத்தி, சூறையாடிய நபர்களைப் பிடிக்க தனிப்படையை போலீஸார் அமைத்துள்ளனர். பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தீவிரமாக போலீஸார் விசாரித்து வருகிறார்கள். 

தேவாலாயத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களையும் போலீஸார் ஆய்வு செய்து வருகிறார்கள். தேவாலாயத்தில் பாதிரியார் இல்லாத நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, தேவாலயத்தில் இருந்த காணிக்கை பெட்டியையும் காணவில்லை என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவாலாயத்தில் பணியாற்றுவோர் கூறுகையில் “ நாங்கள் வெளியே சென்றுவிட்டு நேற்று மாலை 6மணிக்கு தேவாலயத்தை சுத்தம் செய்ய வந்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்த, குழந்தை இயேசு சிலையும் உடைந்து கிடந்தது. உடனடியாக பாதிரியாருக்கு தகவல் அளித்தோம்” எனத் தெரிவித்தனர்

மைசூரு காவல் கண்காணிப்பாளர் சீமா லட்கர் கூறுகையில் “ தேவாலயம்மற்றும் அதைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகிறோம். திருட்டு நோக்கில்தான் நபர்கள் வந்து சென்றதுபோல் தெரிகிறது, தேவாலயத்தில் இருந்த காணிக்கை பெட்டியைக் காணவில்லை. போலீஸார் தீவிரமாக, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள் “ எனத் தெரிவித்தார்

கர்நாடக மாநிலத்தில் வலுக்கட்டாயமாக மதமாற்றம் நடக்கிறது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துவலது சாரி அமைப்புகள் கடந்த மாதம் வலியுறுத்தின.  

கர்நாடக அரசு ஏற்கெனவே கட்டாய மதமாற்ற தடைச்சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளது. இதன்படி, ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதத்துக்கு ஒருவரை கட்டாயப்படுத்தியோ, தாக்கத்தினாலோ, ஏமாற்றியோ மாறச் செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
asianetnews


 


Post a Comment

0 Comments