Ticker

6/recent/ticker-posts

Ad Code

FIFA World Cup 2022 : உலகக் கோப்பை கால்பந்து : மொராக்கோவை வீழ்த்தி ஃபைனலில் நுழைந்த பிரான்ஸ்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொராக்கோவை வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு பிரான்ஸ் அணி முன்னேறியது.

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அல்பையத் மைதானத்தில் நள்ளிரவு நடைபெற்ற போட்டியில் நடப்புச் சாம்பியன் பிரான்ஸ், முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய மொராக்கோவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 5-வது நிமிடத்திலேயே பிரான்ஸ் வீரர் தியோ ஹெர்னண்ட்ஸ் தலை உயரத்திற்கு வந்த பந்தை, அட்டகாசமாக வலைக்குள் திருப்பி தனது அணியின் எண்ணிக்கையை தொடக்கிவைத்தார்.

இதையடுத்து பதில் கோல் அடிக்க மொராக்கோவும் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க பிரான்ஸும் தீவிரம் காட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. குறிப்பாக இரு அணி வீரர்களும் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியதால் ஏமாற்றமடைந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் 79 நிமிடத்தில் மாற்று வீரராக வந்த பிரான்ஸ் வீரர் ராண்டல் கோலோ மானி மேலும் ஒரு கோல் அடிக்க, மைதானத்தில் கூடியிருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்ளிட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.

ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோ அணியின் அருமையான வாய்ப்பை பிரான்ஸ் வீரர் தடுக்க, பிரான்ஸ் 2- 0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியான பிரான்ஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜெண்டினாவை எதிர்கொள்கிறது.
news18


 


Post a Comment

0 Comments