Ticker

6/recent/ticker-posts

Ad Code

AIR INDIA விமானத்தில் சுற்றித்திரிந்த பாம்பு.. அதிர்ச்சியடைந்த பயணிகள்.. விசாரணைக்கு உத்தரவு !

துருக்கி நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனிக்குக் கடந்த கடந்த ஜூலை மாதம் சென்ற விமானத்தில் வழங்கப்பட்ட உணவில், வெட்டப்பட்ட நிலையில் பாம்பு தலை ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் லண்டனிலிருந்து துபாய்க்கு பயணித்த விமானத்தில் உணவில் மனிதரின் பல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இதை விட அதிர்ச்சியான சம்பவம் ஒன்று தற்போது டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா விமானத்தில் நடந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை அன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் பி-737 விமானம் கேரள மாநிலம் கோழிகோட்டில் இருந்து துபாய்க்கு சென்றுள்ளது. இந்த விமானத்தின் சரக்குகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பெரிய பாம்பு ஒன்று சுற்றித்திரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் பயணிகளுக்கு ஏதும் நேரவில்லை என்றும், அவர்கள் துபாயில் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட பாம்பு சம்பவம் குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஏர் இந்தியா விமானத்தில் பச்சையான இறைச்சி பறிமாறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
kalaignarseithigal



 


Post a Comment

0 Comments