Ticker

6/recent/ticker-posts

மியான்மர் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை!


மியான்மர் நாட்டின் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அந்த  தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ராணுவம் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

ஆங் சான் சூகி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பல்வேறு வழக்குகளிலும் அவருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இயற்கை பேரழிவுகள் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், ராணுவ நீதிமன்றம் மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இதனால், மொத்தம் 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆங் சான் சூகியை விடுதலை செய்ய ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்திய நிலையில், அவருக்கு கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது முதல் அந்நாட்டில் நிலைமை மோசமடைந்துள்ளது. ராணுவத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 2 ,600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
news18



 


Post a Comment

0 Comments