நான் திருமணம் செய்து 15 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. எனது கணவனின் துர்நடத்தைகளால் நான் பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளேன். இதன் காரணமாக நான் தீவிர மன அழுத்தத்திற்குப் பட்டுள்ளதாகவும், மன வைத்திய நிபுணர் ஒருவரிடம் சிகிச்சை பெறுமாறும் வேண்டப்பட்டுள்ளேன். ஆனால் இவ்வைத்திய நிபுணர் சிபார்சு செய்துள்ள மாத்திரைகளுக்கு அதிக தூக்கம் ஏற்படுவ தோடு உடல் நிறையும் கூடிக்கொண்டே செல்கின்றது. இதற்கான வேறு ஏதும் வழிகள் இருந்தால் அறியத்தரவும்.
பாத்திமா
பதில்; மன அழுத்த நோய் இன்றைய சந்ததியினரிடையே பரவலாகக் காணப் படுகின்றது. இதற்கான காரணங்களில் நிலையற்ற மன நிலை, ஏனையவர்கள் ஏற்படுத்துகின்ற தொடர்ச்சியான இடை யூறு அல்லது தொந்தரவு, அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புக்கள் போன்ற வைகள் முக்கியமாகும். இக்காரணிக ளினால் மன நலத்திற்குத் தொடர்ச்சி யாக ஏற்படுத்தப்படுகின்ற தாக்கங்கள் இறுதியில் மன அழுத்த நோயை ஏற்ப டுத்துகின்றன. | இந்நோய் தொடர்ந்தும் மனவேத னையுடன் வாழ்க்கையைக் கொண்டு செல்பவர்களுக்கும், உறவுகளின் தொடர்ச்சியான தொந்தரவு, குடும் பத்தகராறு, திடீர் இழப்புகள், நாட் பட்ட நோய்களினால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், காலக்கேட்டுடன் கூடிய வேலைப்பளு, தொடர்ச்சியான பொருளாதார மற்றும் குடும்பப் பிரச் சினையுடையவர்கள், பிள்ளைகளின் அசாதாரண செயலினால் தொடர்ந்தும் பிரச்சினைகளுக்குட்பட்டவர்கள் போன்ற நிலைகளில் மூளைக்கு ஏற் படுகின்ற அழுத்தத்தினால் ஏற்படு கின்றது.
மேலும் மேற்கூறிய காரணிகளை புகைத்தல், மதுபானம் அருந்துதல், போன்றவைகள் தீவிரப்படுத்துவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் மன அழுத்தத்திற்கு தாங்களே காரண மாக இருக்கிறார்கள். உதாரணமாகத் தனது வாழ்வில் நிகழக் கூடிய அற்ப விடயங்களையும் பாரிய பிரச்சினை யாகக் கருதி அல்லது நடைபெறாத ஒரு விடயத்தை நடந்தது போல் எண்ணி தன்னைத்தானே மன அழுத்தத்திற் குள்ளாக்கிக் கொள்கிறார்கள். இதற்கு மாறாக ஒரு சிலர் தனது வாழ்வில் எப்பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் மன உறுதியுடன் செயற்பட்டு அதை எதிர்கொள்கிறார்கள். இவர்களை மன அழுத்தம் ஒருபோதும் நாடாது. மன வலிமை குறைந்தவர்களையே மன அழுத்தம் நோய் வெகுவாகப் பாதிக்கின்றது.
மன அழுத்தம் என்பது ஆரம்பத்தில் ஒரு சாதாரண விடயமாக இருந்தாலும் கூட இது தொடர்ச்சியாக நிலை - கொள்ளும் போது களைப்பு, தொடர்ச் சியான தலைவலி, நிம்மதியற்ற நிலை, அதிக கோபம், பசியின்மை , ஞாபக மறதி, தன்னைத்தானே குறைவாக எண் ணுதல், கைகால்கள் குளிர்தல், மூச்சுக் கஷ்டம், தாம்பத்திய வாழ்க்கையில் விருப்பமின்மை, தூக்கமின்மை, உடம்பு வலி, சமிபாட்டுத் தொகுதி நோய்கள் வலி, சமிபாட்டுத் தொகுதி நோய்கள் போன்றவைகள் ஏற்படலாம். பொது வாகக் கூறப்போனால் மன அழுத்தம் என்பது பல நோய்கள் ஏற்படுவதற் கான அடித்தளம் என்றே கூறலாம். . பல ஆராய்ச்சிகளின்படி மனஅழுத்தம் பாரிய நோய்களான இருதயக் கோளா றுகள், நீரிழிவு நோய், புற்று நோய், மனச் சோர்வு (Depression) போன்ற நோய்களை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்கை எடுக்கின்றன.
மனஅழுத்தம் உடையவர்களில் சில ஹோர்மோன்கள் கூடுதலாகச் சுரக்கப் படுவதனால் அதிக இருதயத் துடிப்பு, அதிக கொலஸ்ரோல், குருதி உறைதல், அதி கூடிய இரத்த அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டு மாரடைப்பு, பாரிசவாதம் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும் மன அழுத்தமுடையவர்களுக்கு ஏற்படக்கூடிய மற்றுமொரு பிரச்சினைதான் பசியின்மை காரணமாக விட்டமின்களும் ஊட்டச்சத்துக்களும் குறைந்து நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதன் காரணமாகப் பல தொற்று நோய்களும் ஏற்படக் காரணமாகின்றன.
எனவே இத்தனை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடிய இக்கொடிய நிலை எம்மைத் தாக்காதிருக்க நாம் எமக்கென ஒரு திடமான கொள்கையை வகுத்து அதன்படி வாழ்ந்தால் மன அழுத்தம் ஏற்படாது. அத்துடன் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுடன் இருப்ப வர்கள் தினமும் அப்பிரச்சினைகளை யோசித்துக் கொண்டிருப்பதை விடவும் அப்பிரச்சினைகளிலிருந்து மீள்வதற் கான உறுதியான நடவடிக்கைகளை தாங்களோ அல்லது மற்றவர்களின் உதவியுடனேயோ மேற்கொள்ள வேண்டும். தனக்கு ஏற்படக்கூடிய தடைகளை, தான் முன்னேறுவதற்கான படிக்கற்களாக எண்ணி செயற்பட்டால் மன அழுத்தம் வரவே வராது. எனவே மன அழுத்தத்தை வரவழைப்பதும் விரட்டுவதும் உங்கள் கையில்தான் உள்ளது.
திருமண வாழ்க்கையில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளையும் மிகக் கவனமாக அணுக வேண்டும். திருமணம் என்றாலே இரு மனங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றாக வாழ்வதற் கான ஏற்பாடாகும். அதில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை ஒருவருக்கொ ருவர் விட்டுக் கொடுப்புடன் செயற் பட்டு நடந்தால் திருமண வாழ்க்கையில் நறுமணம் வீசும். இல்லையேல் திருமண வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமே திரிபடைந்து விடும்.
இங்கு கேள்வி கேட்டிருக்கும் சகோ தரியும் இது விடயமாக மேற்குறிப்பிட் டுள்ள ஆலோசனைகளைக் கருத்திற் கொண்டு செயற்பட்டால் உங்கள் பிரச்சினைகளுக்குரிய தீர்வுகளை இலகுவாகப் பெறலாம்.
அத்துடன் தீவிர மன அழுத்தத்திற்குட் பட்டவர்கள் மனநல ஆலோசனையும் இயற்கை மருத்துவச் சிகிச்சைகளையும் பெற்றால் இன்ஷா அல்லாஹ் கூடிய பயனைப் பெறலாம். யுனானி வைத் தியத்துறையில் பக்க விளைவுகளற்ற பல சிசிச்சை முறைகள் உள்ளன. இச் சிகிச்சையுடன் மனநல சிகிச்சை ஆலோசகர்களது உதவியையும் பெற்று பலர் சிறந்த பலனைப் பெற்றுள்ளனர்.
இறுதியாக வாசகர்களுக்கு விஷேடமாகத் தம்பதிகளுக்கு ஒரு செய்தியாக மணவறையில் ஆரம்பிக்கும் திருமண வாழ்க்கை மண்ணறையைச் சென்றடையும் வரை சந்தோசஷமாக இருக்க வேண்டுமானால் விட்டுக்கொடுப்பு, பேராசையின்மை, பொறுமை போன்றவைகள் முக்கியம்.
DR.NASEEM
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments