Ticker

6/recent/ticker-posts

முழங்கால் வலி குணமடைய என்ன வழி?

கேள்வி:- எனக்கு வயது 65. சுமார் ஐந்து வருடங்களாக இரு முழங்காலும் வீக்கமடைந்து வருத்தமாக உள்ளது. நடக்கும் போது வலி. உட்கார்ந்து எழும்பும் போதும் வலி. எவ்வளவோ ஆங்கில மருந்துகள் செய்தேன் பலன் இல்லை. இதற்கு சத்திர சிகிச்சையை தவிர வேறு வழி இல்லை என்று சிலர் சொல்கின்றனர். ஆரம்பத்தில் வலி தாங்க முடியாமல் 2, 3 முறை நீர் எடுத்தும் விட்டேன். எக்ஸ்ரே படத்தில் நரம்பு சிதறுண்டு செயல் இழந்துள்ளதை காட்டு கிறது. இதற்கு யூனானி மருத்துவம் ஏதும் உண்டா ? அப்படி எனில் நான் என்ன செய்ய வேண்டும்.
எம்.எஸ்.எம்.முன்ஸிர், துன்துவ, பென்தோட்டை.


பதில்:-
முழங்கால் நோய் என்பது அனேகமாக எலும்புகளில் ஏற்படுகின்ற மாற்றத்தினால் தான் உண்டாகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட எலும்புகள் ஒன்று சேரும் போது மூட்டுக்கள் உருவாகின்றன. இந் நோய் மூட்டு வாதம் எனவும் பொதுவாகக் கூறப்படுகின்றது.

எமது உடம்பில் உள்ள எலும்புத் தொகுதி என்பது கட்டிடங்களைத் தாங்கி நிற்கும் கொங்கிரீட் தூண்களுக்கு சமனாகும். கொங்கிரீட் தூண்களுக்கான விட்டமின்களான சீமெந்து இரும்பு மணல் போன்றவைகள் தரமாக இல்லா விட்டால் கட்டிடங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அல்லது கட்டிடங்கள் பழமையடையும் போதும் கொங்கிறீட் தூண்கள் பலவீனமடைகின்றன. இதே போன்று தான் எமது எலும்பு களும் பல காரணங்களினால் பலவீன மடைகின்றன.

எமது மூட்டுக்களில் உள்ள எலும்புகளின் நுனிப் பாகத்தில் ஒரு மெல்லிய படலம் உள்ளது. இதைக் கசியிழையம் எனக் கூறப்படும். அத்துடன் மூட்டுக்களின் உட் பகுதியில் அமைந்துள்ள சவ்வினால் ஒரு திரவம் சுரக்கப்பட்டு மூட்டுக்களில் உள்ள எலும்புகளுக்கு உராய்வு நீக்கியாகத் தொழிற்படுகின்றன. எனவே, இந்த அமைப்பு தான் மூட்டுக்களைப் பாதுகாக்கின்றன.

மூட்டு நோய்கள் பலவகை. அதில் ஒஸ்டியோ ஆத்ரைடிஸ் என்ற நோயே அதிகமாகக் காணப்படுகின்றது. இது பொதுவாக 50 வயதைத் தாண்டும் போதும் ஏற்படுகின்றது. இதில் மேற் கூறிய கசியிழையங்களே ஆரம்பத்தில் தேய்வடைய ஆரம்பிக்கின்றன. இந்நோய் வருவதற்கான முக்கிய காரணங்களாக நாம் உட்கொள்ளும் உணவு, உடற்பயிற்சியின்மை, மூட்டுக்க ளுக்கு ஏதாவது ஒரு காரணத்தினால் காயம் ஏற்படுதல், அதிக உடற்பருமன், மூட்டுக்களுக்கு தொடர்ச்சியான அழுத்தம் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

ஒஸ்டியோ ஆத்ரைட்டிஸ் பொதுவாக எமது உடம்பைத் தாங்கக் கூடிய முட்டுக்கால், இடுப்பு போன்ற மூட்டுகளையே முதலில் தாக்குகின்றன. இந் நோய் நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்காவிட்டால் இந்நோயின் தீவிரத் தன்மை கூடி இறுதியில் நடக்க முடியாத நிலை ஏற்படுவதோடு எலும்பு முறிவு ஏற்படக் கூடிய நிலையும் உருவாகலாம்.

ஆகவே, இந்நோய் வராமல் தடுக்கவும் நோய் ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சையின் ஒரு பகுதியாகவும் வெள்ளைப்பூடு, வெங்காயம், மரக்கறி வகைகள், கீரை வகைகள், அமிலத் தன்மையற்ற பழ வகைகள் போன்றவற்றை எமது உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் கொழுப்புச்சத்து அதிகமான உணவுகள், இறைச்சி, புளிப்புத் தன்மை கொண்ட பழ வகைகள், உருளைக்கிழங்கு, தக்காளி, அதிக உப்பு, அதிக சீனி, கோப்பி போன்றவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இரும்புச் சத்துள்ள மாத்திரைகளைப் பாவிப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இரும்புச் சத்து கூடிய இயற்கை உணவு வகைகளைப் பாவிக்கலாம். 

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனக்கு ஆலோசனையும் தகுந்த வைத்தியமும் தேவை எனக் குறிப்பிட்டுள்ளார். 

சாப்பாட்டு விடயங்களில் நான் மேற்கூறிய முறைகளைக் கையாளவும். முழங்கால்கள் தான் எமது முழு உடம்பின் நிறையையும் தாங்குகின்றன. அதுவும் மூட்டுக்கள் நோய்வாய்ப்பட்டு விட்டால் முழு உடம்பின் நிறையையும் தாங்குவது மிகவும் கஷ்டமாகும்,

எனவே, அதிக உடற்பருமன்  உடையவர்கள் தமது உடம்பின் நிறையைக் குறைத்துக் கொள்வது நன்று. அத்துடன் ஊன்று கோல் பாவிப்பதன், மூலம் அது எமது உடம்பின் மூன்றாவது காலாகத் தொழிற்பட்டு மூட்டுக்களுக்கு உடல் நிறையினால் ஏற்படுத்தக் கூடிய அழுத்தத்தையும் குறைக்கின்றதோடு அருகிவரும் சுன்னத்தை ஹயாத்தாக்கிய நன்மையும் கிடைக்கும்.

அத்துடன் தீவிர வலி இருக்கும் போது கீழே உட்கார்ந்து செய்கின்ற எந்தவொரு வேலையையும் தவிர்த் துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மூட்டுக்களுக்குமான விசேட உடற்ப யிற்சி முறைகளும் உள்ளன. ஆனால் அவைகளை வைத்தியர்களது ஆலோ சனை பெற்றே செய்தல் நன்று. அடுத்த தாக நோயைக் கட்டுப்ப டுத்துவதற்குரிய எந்தவொரு மாத்திரையானாலும், வைத்தியரின் ஆலோசனையின்றி பாவிப்பது நல்லதல்ல. இவைகள் குடற்புண்களை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கக் கூடியவை.

யுனானி முறைப்படி இந்நோய்க்குச் சிகிச்சையளிக்கும் போது மருத்துவக் குணமுள்ள உணவுகளோடு ஊளட்டச்சத்துள்ள மருந்துகளையும் வெளியே பூசுவதற்காக வேண்டி, சில விசேட மருந்துகளையும் கொடுப்ப தோடு மற்றும் சில சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. ஆனால் இவைகள் பக்க விளைவுகளை உண்டு பண்ணுவது இல்லை. இதற்கு மாறாக, யுனானி மருந்துகள் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டுகின்றன. 

இறுதியாக இப் பகுதியை வாசிக்கக் கூடியவர்களுக்கு ஒரு செய்தியாக அதாவது ஒஸ்டியோ ஆர்தரைடிஸ் என்ற நோய் வராமல் தடுப்பதாயின் இயற்கை எமக்குத் தந்த உணவுகளைக் கூடுதலாக உண்ணும் படியும் முடியுமானளவு உடற்பயிற்சியைத் தினமும் செய்து வருமாறும்

வேண்டுகிறேன். அத்துடன் இளம் சந்ததியினருக்கு எதிர்காலத்தில் இந்நோய் வராமல் இருக்க எம்பெற்றோர்கள் எமக்குத் தந்த இயற்கை உணவுகளை எமது பிள்ளைகளுக்கும் கொடுப்போம்.

DR.NASEEM



 


Post a Comment

0 Comments