Ticker

6/recent/ticker-posts

வார்த்தைகளை விட்ட ஆளுநர்.. மைக்கை பிடித்த முதலமைச்சர்.. சட்டப்பேரவையில் பரபர சம்பவம்!

இந்த ஆண்டுக்கான முதல் சட்டமன்ற கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் மக்கள் அரசின் கொள்கைகளை விளக்கினார். எனினும் திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில் சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஆளுநர் உரைக்கு பின்னர் முதலமைச்சர்  உரையாற்றினார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஆளுநர் அரசின் கொள்கைக்கு மாறாக தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை படிக்காமல் புறக்கணித்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இன்றைக்கு அச்சிடப்பட்டு ஆளுநர் மற்றும் உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டவை மட்டும் அவை குறிப்பில் இடம் பெற வேண்டும். சட்டப்பேரவை விதிப்படி,  அச்சிடப்பட்ட உரையை மட்டும் அவை குறிப்பில் இடம் பெற வேண்டும்.” என கோரிக்கை விடுத்தார். அத்துடன், அச்சிடப்பட்டதை மீறி ஆளுநர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்தார்.

தீர்மானம் கொண்டுவரப்பட்டதை அடுத்து ஆளுநர் இருக்கையில் இருந்து இறங்கி சென்று விட்டார், தேசியகீதம் இசைக்கப்படும் முன்பே ஆளுநர் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறி புறப்பட்டார்.
SOURCE;news18



 


Post a Comment

0 Comments