Ticker

6/recent/ticker-posts

ஈரானின் உச்சத் தலைவர் பற்றி மோசமான கேலிச்சித்திரம் வெளியிட்ட பிரான்சின் Charlie Hebdoக்கு எச்சரிக்கை..


பிரான்சின் Charlie Hebdo சஞ்சிகை ஈரானின் உச்சத் தலைவர் பற்றி மோசமான கேலிச்சித்திரம் வெளியிட்டதற்கான விளைவுகள் பற்றி டெஹ்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் நடந்த போராட்டத்துக்கு ஆதரவாக, அந்நாட்டின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியைக் (Ayatollah Ali Khamenei) கேலிசெய்யும் பத்துக்கும் மேற்பட்ட சித்திரங்களை அந்த வாரஇதழ் வெளியிட்டிருந்தது.

அதற்குத் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) Twitterஇல் குறிப்பிட்டுள்ளார். ஆனால் என்ன மாதிரியான நடவடிக்கையாக அது இருக்கும் என்பது பற்றி அவர் விவரித்துச் சொல்லவில்லை.

பிரெஞ்சுத் தூதர் நிக்கோலாஸ் ரோச்சுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சு நேற்று அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு Charlie Hebdo சஞ்சிகை நபிகள் நாயகம் பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டது. அதையடுத்து பாரிசில் உள்ள அதன் அலுவலகத்தில் துப்பாக்கிக்காரர்கள் இருவர் நடத்திய தாக்குதலில் ஊழியர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.
seithi.mediacorp



 


Post a Comment

0 Comments