போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதா? சோதனைச்சாவடிகளில் 10 நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்கும் கருவி

போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதா? சோதனைச்சாவடிகளில் 10 நிமிடங்களுக்குள் கண்டுபிடிக்கும் கருவி

போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டதா என்பதை 10 நிமிடங்களுக்குள் அறியக்கூடிய சோதனைக் கருவி குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளில் நிறுவப்பட்டுள்ளன.

சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வெளிநாட்டில் போதைப் பொருள் புழங்குவதைத் தடுப்பதற்கு அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக உள்துறை துணையமைச்சர் முகமது ஃபைஷல் இப்ராஹிம் (Muhammad Faishal Ibrahim) கூறினார்.

சோதனைக் கருவிகள் கடந்த மாதத்திலிருந்து சோதனைச்சாவடிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாட்டிலிருந்து திரும்பும் பயணிகளிடமிருந்து பெறப்படும் உமிழ்நீர் மாதிரிகள் மீது சோதனை நடத்தப்படுகின்றன.

போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சோதனை முடிவுகள் குறிப்பிட்டால் பயணிகளிடம் மேல் விசாரணை நடத்தப்படும்.

சோதனைக் கருவிகள் சாலைத் தடுப்பு நடவடிக்கைகளிலும் முன்னோடி சோதனை அடிப்படையில் இம்மாதத் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தப்படுகின்றன. 

விரைவாகவும் எளிதாகவும் பயன்படுத்தக்கூடிய புதிய சோதனைமுறை போதைப் பொருள் புழக்கத்தை அடையாளம் காணும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் முயற்சியில் உதவும்.

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் தற்போது சிறுநீர் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும் புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன.

அனைத்துத் தொடக்கப்பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளும் ஆண்டுதோறும் ஒரு கல்வித்திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
mediacorp
ஆதாரம் : Today 



 



Post a Comment

Previous Post Next Post