Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-75


குறள் 715
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

தம்பி.. பெரிய பெரிய அறிவாளிங்கல்லாம் இருக்க எடத்துல போயி, அவங்களை முந்திக்கிட்டு எதையும் பேசக் கூடாது. இப்படி வாயைப் பொத்திக்கிட்டு இருக்க குணம் தான் எல்லாத்திலியும் சிறந்த குணம் தம்பி. 

குறள் 717
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

தப்பு இல்லாத சொற்கள் எதுன்னு, கண்டு பிடிச்சிறக்கூடியவங்க இருக்க அவையில், கற்றுத் தேர்ந்தவங்களோட சிறப்பு வெளிப்படும். 

குறள் 718
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

அவங்களாவே எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சிருக்கவங்க கிட்ட போய் உரையாற்றுவது, தானே வளரக்கூடிய பயிர் இருக்க பாத்திக்கு தண்ணீர் பாச்சுத மாதிரி இருக்கும்.

குறள் 719
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

நல்லவங்க இருக்க கூட்டத்துல மனசுல படும்படி நல்ல கருத்துக்களைச் சொல்லக்கூடிய திறமைசாலிங்க, முட்டாப் பயலுவொ இருக்க கூட்டத்துல பேசாம இருக்கது தான் நல்லது. 

குறள் 720
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

நல்ல அறிவாளிங்க, தராதரம் இல்லாதவனுவகிட்ட போய் பேசுதது இருக்கே,அது எப்படி இருக்குமின்னா, வீட்டுல இருக்க அங்கணாக் குழியில போயி அமிர்தத்தை கொட்டுற மாதிரி இருக்கும். 
(தொடரும்)



 


Post a Comment

0 Comments