
உன்னை தேடி அலைந்த
நாட்கள் சில
உருவம் தெரியா உன் உறவுக்காய்
ஏங்கிய நாட்கள் பல
உருவமில்லா உன் உறவும்
அனுபவிக்க முடியாத உன் பாசமும்
தேடினாலும் கிடைக்காத
உன் ஸ்பரிசமும் நெஞ்சுக்குள்
முள்ளாய் தைக்கிறது
ஒழித்து வைத்திருந்தால்
கண்டு பிடித்து விடுவேன்
என் கண்ணெதிரே என்னால்
தொலைந்து போயிருந்தில்
தேடி வருவேன்
நினைக்கும் திசையெல்லாம்
முகவரியே தெரியாத உன்
கற்பனை பூமுகமே
சிரிக்கும் உன் மழலை
புன்னகை ஒலிக்கும் உன்
செல்லக் குரல்
நீ என்னிடம் வர நீ என்னிடம்
கேட்கும் விலை தான் என்ன
நீ
கேட்ங்கும் விலை என்
உயிர் எனாறால் அதனைத்
தந்து உன்னை இவ்வுலகிற்க்கு
வரவேற்பேன் என் பேர் சொல்லும்
என் தேவதையாய்
நீ என்னிடம்
வர கேட்பது தான் என்ன
நீ என்னிடம் வருவாய் நான்
உனக்காய் என்னவெல்லாம்
செய்வேன் என நீ அறிவாயா
காலமுழுவதும் நீ துயில் கொள்ள
என் மடியை தொட்டிலாய்
மாற்றி விடுவேன்
என் விழி மூடாமல் உறங்கும்
உன் அழகை ரசித்திடுவேன்
பகிர்ந்தளித்த எல்லா பாசமும்
காதலும் ஒட்டு மொத்தமாய்
உனக்கே தந்திடுவேன்
உன் விழியில் கண்ணீரே
வராமல் என் புன்னகையையும்
உனக்கே பரிசாய் தந்திடுவேன்
உன் இதழில் விரியும்
புன்னகையை ரசித்திடுவேன்
என் மூச்சும் உன் சுவாசமாய்
மாற வரம் ஒன்று கேட்பேன்
நீ துயரின்றி வாழ என்
சந்தோசங்களை உனக்காய்
தியாகம் செய்வேன்
இன்னும் உனக்கு வரும்
துயரை எனக்கு தர சொல்லி
இறைவனை கேட்பேன்
மாசு கலக்காத இந்த அன்னையின்
அன்பை புரிந்து கொள்ள
கண்ணாமூச்சு ஆடும் என்
உயிரின் அழகிய உறவே
என்னிடம் நீ வருவாயா
S.Murshida Riyas
Rambukkana
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments