Ticker

6/recent/ticker-posts

உயிர்க்கும் கணங்கள்!


விலகிச்செல்கின்ற
கணத்திலிருந்து
மிகவும்
நெருங்கி விடுகிறாய்
இதயத்தில்
நினைவுகளாக
மனதிலே
உணர்வுகளாக

அதன் பின்னரான
பொழுதுகளில்
நீ வேறு
நான் வேறு
என்பதே
இங்கில்லை

நினைவுத்தூரிகையால்
காலவரையறையின்றி
நேசவர்ணம்
குழைத்துக் குழைத்து
நெஞ்சமெல்லாம்
நிறம் மாறா
கவிதைகளைத்
தீட்டிக்கொண்டே
இருப்பேன்!

இதயவறைகள்
கவிதைகளால்
நிறைகின்றன
என்
கணங்களை
உயிர்ப்பிக்கின்றன!

Dr ஜலீலா முஸம்மில்
ஏறாவூர்
இலங்கை




 


Post a Comment

0 Comments