இணையத்தின் முக்கியமான அம்சமே தேடுதல் தான். நாம் எது குறித்து கேட்டாலும் உடனே பதில் சொல்கிறது கூகுள். கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்வதால் தான் மாதா, பிதா, வரிசையில் குருவுக்குப் பதில் கூகுளை வைத்து மீம்ஸ்கள் கூட வலம் வருகின்றன. சில நேரங்களில் "பதில்" அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் 95 விழுக்காடு சரியான பதிலைத் தந்து விடுகிறது கூகுள். இணைத்தின் முதல் தேடு பொறியாக அறிமுகம் ஆனது யாகூ தான். ஆனால் அப்டேட் இல்லாததால் காலப் போக்கில் யாகூ வழக்கொழிந்து போனது. அதன் பிறகு அறிமுகமான கூகுள் நொடிக்கு நொடி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
தனது பயனர்களின் விருப்பம் என்ன, தேவை என்ன என்பதை துல்லியமாக அறிந்து அதற்கேற்ப அப்டேட்களை செய்து கொண்டே வருகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை கொண்டுள்ளது கூகுள். இந்நிலையில் தான் தனது அடுத்த வெர்ஷன் அப்டேட்டை அடுத்த வாரம் தொடங்க உள்ளது கூகுள் நிறுவனம். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கூகுளின் சிஇஓ சுந்தர் பிச்சை. கூகுளின் போட்டி தேடு பொறியான மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பிங்(Bing) தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை புகுத்த உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் விழித்துக் கொண்டது கூகுள். பதறிய கூகுள் உடனடியாக தனது தேடுபொறியிலும் செயற்கை நுண்ணறிவை புகுத்த வேண்டும் என திட்டவட்டமாக முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு மே மாதம் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு உணர்வுகள் இருப்பதாகக் கூறிய பொறியாளர் ப்ளேக் லெமோயின் என்பவரை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது வேறு கதை.
தனது பொறியாளர்களை துரிதப்படுத்தி, நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளார் கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை. புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை புகுத்துவதை நினைத்து தான் மிகவும் உற்சாகமடைவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் பார்ட்(Bard) என்ற பெயரில் கூகுள் தேடு பொறியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்த உள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்பிறகு பயனர்களுக்கு மிக துல்லியமான பதில்களை கூகுள் நிறுவனம் வழங்கும் என்றும், இணையத்தை பயனர்ள் புரிந்து கொள்வதற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இனி மிகவும் துல்லியமான மற்றம் நம்பகத்தன்மையுள்ள தரமான பதில்கள் பயனர்களுக்கு கிடைக்கும் என்றும் கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments