கெஸ்ரிக் நோயும் உணவுப் பழக்கவழக்கமும்

கெஸ்ரிக் நோயும் உணவுப் பழக்கவழக்கமும்


எனக்கு 42 வயது கடந்த 15 வருடங்களுக்கு மேலாக கெஸ்ரிக் நோயினால் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றேன். பல வைத்தியர்களிடம் சிகிச்சை பெற்றும் நிரந்தர தீர்வு இல்லை. யுனானி மருத்துவத்தில் ஏதும் சிகிச்சை உண்டா? பதிலை எதிர்பார்க்கின்றேன்.
அப்துல் வாஜித் , அநுராதபுரம்.

பதில்: கெஸ்ரிக் (Gastric) எனப்பொ . துவாக கூறப்படும் சொல்லானது எமது இரைப்பையில் ஏற்படுகின்ற ஒரு அசாதாரண அழற்சியை அல்லது வீக்கத்தை குறிக்கும். இதை மருத்துவத்தில் கெஸ்ரைடிஸ் (Gastritis) எனக்கூறுவார்கள். எமது முன்னோர்களுக்கு இந்நோய் மிகவும் குறைவாக காணப்பட்ட போதிலும் இன்றைய சந்ததியினரை தாக்குகின்ற பொதுவான நோய்களில் இதுவும் ஒன்றாக காணப்படுகின்றது. மற்றுமொரு முக்கிய விடயம் என்ன வென்றால் கெஸ்ரைடிஸ் எமது முன்னோர்களின் வயது வந்தவர்களிடையே காணப்பட்ட போதும் இன்று சிறு பிள்ளைகள் வாலிபர்களிடையேயும் அதிகமாக காணப்படுகின்றது.

அனேக பாடசாலை மாணவர்கள் இந்நோயினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இது மாணவரிகளின் படிப்பிற்கு கூட தடையாக உள்ளது. இவ்வாறு அதிகரித்து வரும் இந்நோய்க்கு முக்கிய காரணம் உணவில் ஏற்பட்ட மாற்றமும் மன அழுத்தத்துடன் கூடிய வாழ்க்கையுமேயாகும். 

இரைப்பையின் உட்பகுதி எமது வாயினுள் காணப்படுகின்ற மெல்லிய படலத்தை ஒத்ததாகி ஒரு மெல்லிய பட லத்தினால் சூழப்பட்டுள்ளது. எனவே இரைப்பை என்பது எமது உடம்பில் உள்ள மற்றைய உறுப்புக்களைப்போ லன்றி இலகுவாகவும் நேரடியாகவும் தாக்கப்படக்கூடிய ஒரு உறுப்பாகும். 

நாம் உறைப்பு, கசப்பு, புளிப்பு, அதிக காரமுடைய வாசனைத்திரவியங்கள், எண்ணையில் பதனிடப்பட்ட உணவுகள் போன்ற எவ்வகையான உணவுகளை உட்கொண்டாலும் அவை முதலில் எமது இரைப்பையை சென்றடைகின்றன. 

இவ்வாறு உட்கொள்ளும் உணவுகளின் தன்மை எவ்வகையாக இருந்தாலும் அவை அனைத்துக்கும் முகங்கொடுத்து தன்னை பாதுகாக்க இரைப்பை முயற்சிக்கின்றது. ஆனாலும் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற தாக்கங்களுக்கு முகங் கொடுக்க முடியாத நிலையிலேயே கெஸ்ரைடிஸ் ஏற்படுகின்றது. நாம் கொடுப்பதை எல்லாம் ஏற்பது எமது இரைப்பையே. இவ்வாறு தொடர்ந்து சுகாதாரமற்ற எண்ணைத் தன்மையுடைய அதிக காரமான உறைப்புத் தன்மை யுடைய உணவுகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் போது இரைப்பைக்குக் தாக்குப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு இரைப்பை வீக்கமடைகின்றது. இதுவே கெஸ்ரைடிஸ் எனக் கூறப்படுகின்றது. 

இன்று வயது வித்தியாசமின்றி அனேகமானோர் கெஸ்ரைடிஸ் இனால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதை நாமே தேடிக்கொள்கின்றோமே தவிர இயற்கையாக வருவது அல்ல.

இன்று நாம் உண்ணும் உணவு வகைகளையும் அதன் தன்மைகளையும் ஆராய்ந்து பாருங்கள். எமது முன்னோர் களின் உணவுப்பழக்க வழக்கங்களுடன் ஒத்ததாக இருக்கின்றதா என ஒப்பிட்டுப் பாருங்கள். எமது பிள்ளைகளுக்கு விசேடமாக பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களுக்கு முதல் உணவாகிய காலைச் சாப்பாட்டுக்கு எவ்வகையான உணவுகளை கொடுக்கின்றோம் என சிந்தியுங்கள். கோதுமை மாவினால் செய்யப்பட்ட பல வகையான உணவுகளை அல்லவா மாறிக் கொடுக்கின்றோம்?

நேரம் கழித்து உணவு உண்பதும் கெஸ்ரைடிஸ் இற்கு ஒரு முக்கிய காரணமாகும். இன்று அனேகமானோர் காலைச் சாப்பாட்டை மிகவும் நேரம் தாழ்த்தியே உட்கொள்கின்றார்கள்.

அனேகமான பாடசாலை மாணவர்கள் பாடசாலை இடைவேளையின் போதே காலை உணவைச் சாப்பிடுகின்றார்கள். இதுவே மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய கெஸ்ரைடிஸ் இற்குக் காரணம் என நினைக்கின்றேன்.

இது தவிர மதுபானம் அருந்துதல், வைத்தியர்களின் ஆலோசனையின்றி உட்கொள்ளக்கூடிய சில மருந்துகள், ஒரு சில கிருமிகள் மற்றும் சில இரசாயனப் பொருட்களும் கெஸ்ரைடிஸ் இனை உண்டுபண்ணக் கூடியதாகும்.

இந்நோயின் அறிகுறிகள் ஒருவருக் கொருவர் வித்தியாசப்படும். ஆனாலும் பொதுவாக குமட்டல், வாந்தி, வயிற் றுவலி, அஜீரணம், வயிறு ஊதுதல், வயிற்று எரிவு, பசியின்மை , சிலவேளை இரத்த வாந்தி அல்லது மலம் கறுப்பாக இருத்தல் போன்ற குறிகுணங்கள் காணப்படும்.

இந்நோய்க்குத் தகுந்த சிகிச்சை எடுக்காமல் இருந்தால் குருதிச்சோகை, வயிற்றில் புண் மற்றும் இரைப்பை புற் றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இந்நோய் வராமல் தடுப்பதே மேல். அதற்காக வேண்டி உடம்புக்கு ஆரோக்கியமான உணவுகளை நேரந் தவறாது உட்கொண்டு மன அழுத்தமற்ற வாழ்க்கையை கடைப்பிடிப்போமேயானால் இன்ஷா அல்லாஹ் இந்நோ யிலிருந்து தப்பலாம். அதிகளவு மரக்கறி வகைகள், பழவகைகள், தானிய வகைகள் போன்றவற்றை உட்கொள்வ தோடு கோதுமை மாவினால் தயாரிக் கப்பட்ட உணவு வகைகள், எண்ணையில் பதனிடப்பட்ட உறைப்புக்கூடிய உணவு வகைகளையும் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்.

இங்கு கேள்வி கேட்டிருப்பவர் தனக்கு 15 வருடங்களுக்கு மேலாக கெஸ்ரிக் இருப்பதாகவும் பல வைத்தியர் களிடம் சிகிச்சை பெற்றும் தனக்கு நிவாரணம் கிடைக்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். மருந்தினால் மாத்திரம் நோய்களை குணப்படுத்த முடியாது. வைத்தியர்களின் ஆலோசனைகளையும் கடைப்பிடிப்பது முக்கியமாகும். 

யுனானி வைத்திய சிகிச்சையில் சில குறிப்பிட்ட நோய்களை வெற்றிகரமாக குணமாக்க முடியும். அதில் ஒன்றுதான் கெஸ்ரைடிஸ் நோய்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக அல்லாஹ்வினால் அருளப்பட்ட பாக்கியங்களில் ஒன்றுதான் பல வகையான பல சுவைகளையுடைய எம்மை சுதேசிகளாக வைக்கக்கூடிய உணவு வகைகளை படைத்து விட்டு நன்றாக உண்ணுங்கள். பருகுங்கள் ஆனால் வீண்விரயம் செய்ய வேண்டாம் என்ற செய்தியையும் தந்துள்ளான்.

ஆகவே இவைகளை அனுபவிக்க வேண்டுமாயின் எமது இரைப்பையை நலமுடன் பேணுவதற்குரிய வழிவகைகளை நாமே வகுத்துக்கொள்ள வேண்டும்.

DR.NASEEM



 



Post a Comment

Previous Post Next Post