ஏலக்காயின் பயன்கள்

ஏலக்காயின் பயன்கள்

பொதுவாக சுமார் 4 ஆயிரம் வருடங்களுக்கு மேல் மருந்தாக பயன்படுத்தப்படும் ஒரு அற்புதமான மூலிகை தான் ஏலக்காய்.

இந்த ஏலாக்காயை பல வழிகளில் எடுத்துக் கொள்ளவார்கள். உதாரணமாக ஏலக்காய் டீ, ஏலக்காய் சேர்த்த உணவுகள் என பல வழிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.

இவ்வளவு பிரபல்யமான ஏலக்காயில் புரதம், சுண்ணாம்புச் சத்துக்கள், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து வைட்டமீன் என ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.

அந்தவகையில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கும் ஏலக்காயை ஒன்று எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் ஏராளமான நோய்கள் குணமாகும் என்பார்கள். அப்படியான நன்மைகள் என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

1.சிலருக்கு பசியின்மை பிரச்சினை இருக்கும், அதாவது என்ன உணவுக் கொடுத்தாலும் அதில் நாட்டம் காட்டாமல் இருப்பார்கள், அப்படியானவர்கள் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால் உடம்பிலிருக்கும் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதனால் வயிற்றில் சமிபாடு அடையாமல் இருக்கும் உணவுகள் சமிபாடடைந்து பசி எடுக்க ஆரம்பிக்கும்.

2.நெஞ்சில் சளி பிரச்சினைகள் உள்ளவர்கள் என்னடா செய்வது என்ன மருந்து குடித்தாலும் சளி தொல்லை போகவில்லை என புலம்புவார்கள், தினமும் ஒரு ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மென்று வந்தால் நாளடைவில் சளி பிரச்சினை குணமாகும். சளியும் காலப்போக்கில் கரைந்து நிரந்தர நிவாரணம் தருகிறது.

3.சிலருக்கு வாயை திறக்க பயமாக இருக்கும், இதனால் பொது இடங்களில் அவர்கள் நினைக்கும் கருத்தைக் கூட சொல்ல முடியாத ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இந்த பிரச்சினையை ஏலக்காய் நிவர்த்திச் செய்கிறது. கடுமையான வாய் துர்நாற்றம் பிரச்சினையுள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு ஏலக்காயை வாயில் போட்டுக் கொண்டால் பிரச்சினை குணமாகும்.

4.ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது என கூறுவார்கள். இந்த ஏலக்காயை வாயில் போட்டு மென்று வந்தால் சுவாச பிரச்சினை சீராக்கப்படும். இதனால் சீராக சுவாசம் சென்று வரும்.

5.வாந்தி, குமட்டல், வயிற்று கோளாறுகள் போன்ற பிரச்சினையுள்ளவர்களும் இதனை எடுத்துக் கொள்ளலாம். காலப்போக்கில் இந்த பிரச்சினையும் குணப்படுத்தப்படும்.     



 


Post a Comment

Previous Post Next Post