ஆண்மைக் குறைவை நிவர்த்திக்க வழி உள்ளதா?

ஆண்மைக் குறைவை நிவர்த்திக்க வழி உள்ளதா?


ஆண்மைக்குறைவு என்பது இன்று பரவலாகக் காணப்பட்டாலும்  இது திரைக்குப் பின்னால் இருக்கக்கூடிய ஒரு விடயமாகவெ உள்ளது. ஒருவர் தனக்கு ஆண்மைக்குறைவு இருப்பது என்பதை வைத்தியர்களிடம் கூறுவதை கூட  எமது சமய கலாசார பாரம்பரிய நடைமுறைகளுக்கு உகந்தது அல்ல என தினைப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். ஆண்மைக்குறைவு இருப்பவருக்கு  இது ஒரு பிரச்சினையாக  தென்பட்டாலும்  வைத்தியர்கள் இந்நிலையை பல கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது காரணம் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு  ஏற்பட்டால் அவர்ககளுக்கு  எதிர்காலத்தில்  மாரடைப்பு நோய் வரக்கூடிய  சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதால் ஆகும்.

அத்துடன் ஆண்மைக்குறைவு காரணமாக வெளிக்கு வராத பல குடும்பப் பிரச்சினைகளும் எமது சமய சமூக கலாசாரக் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் பல விபரீதங்கள் நடைபெறுகின்றன என்பது எம்மில் அனேகருக்கு தெரியாது என்பது தான் ஒரு பாரிய பிரச்சினையாக உள்ளது. ஆண்மைக்குறைவு என்ற இப்பிரச் சினையால் இரு உள்ளங்கள் பாதிப்ப டைகின்றன என்பதே உண்மை. எனவே இந்நோயும் ஒருவருக்குச் சாதாரணமாக வரக்கூடிய காய்ச்சல் தடிமல் போன்றதே என நினைத்தால் மருத்துவ ஆலோசனை பெறுவதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள்  தாம்பத்திய வாழ்க்கை என்பது உடல் நலத்தைப் போலவே உள நலத்துடன் சம்பந்தப்பட்டது அத்துடன் உள நலமும் தாம்பத்திய வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று மிகவும் நெருக்கமானது. உடல் நலம் நன்றாக இருந்தும் ஒருவரது மன நலம் பாதிக்கப்பட்டு நிம்மதியும் சந்தோ ஷமும் அற்றுப் போனால் கூட அது தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கும்.

எம்மிடம் ஆண்மைக் குறைவு சிகிச்சைக்காக வரும் அனேகமானோரை அவதானிக்கும் போது வேலைப்பளு மற்றும் குடும்பப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளில் சிக்குண்டு தமது மன அமைதியை இழந்தவர்களாகவே அவர்கள் இருக்கின்றனர். உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஆண்மைக்குறைவுடையவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர்.

அத்துடன் தொடர்ந்து மதுபானம் அருந்துதல், போதைப்பொருட்களைப் பாவித்தல் உட்பட அதிக குருதி அழுத்தம், அதிக கொலஸ்ரோல், மனநல நோய்களுக்குப் பாவிக்கும் சில மருந்துகளின் தாக்கங்கள் போன்றவற்றினாலும் ஆண்மைக்குறைவு ஏற்படுகின்றன.

இது தவிர உடம்பில் தைரொக்சின் ஹோர்மோனின் அளவு குறைதல் ஈரல் நோய்கள் அதிக கொலஸ்ரோல் காரணமாக இரத்த நாடிகளின் விட்டம் குறைவதால் ஆண் உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவதன் மூலமும் ஆண்மைக் குறைவு ஏற்படலாம். நடுத்தர வயதுடைய ஒருவருக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுதல் என்பது மருத்துவ ரீதியாக மிகவும் அவதானத்துடன் கருத்திற்கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும். இங்கு அதிக கொலஸ்ரோல் காரணமாக இரத்த நாடிகளின் விட்டம் குறைந்து ஆண்மைக் குறைவு ஏற்பட்டால் எதிர்காலத்தில் இருதய நோய்களில் ஒன்றான மாரடைப்பு வரக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எமது வீடுகளில் நீர் தாங்கிகளில் உள்ள குழாய்களின் விட்டம் நீர் தாங்கிக்குக்கு அருகாமையில் அதிகமாகவும் நாம் நீர் சேகரிக்கும் டெப் இற்கு அருகேயுள்ள குழாய்களின் விட்டம் குறைவாக இருப்பதையும் நாம் அறிவோம். குழாய்களின் உட்பகுதிகளில் ஒரே மாதிரி கறள் படிந்திருந்தாலும் விட்டம் குறைந்த டெப் இற்கு அருகேயுள்ள குழாய்தான் நீர் வராமல் முதலில் அடைபடும். இந்நிலை தொடர்ந்து இருந்தால் நீர் மட்டத்திற்கு அருகில் உள்ள பெரிய குழாய்களும் அடைபடும் என்பதை நாம் அறிவோம். இதேபோன்று தான் இருதயத்திலிருந்து ஆரம்பிக்கும் இரத்த நாடிகளினதும் இருதயத்திற்கு குருதியை வழங்கும் இரத்த நாடிகளினதும் விட்டத்தை விட ஆண் உறுப்புகளுக்கு குருதியை வழங்கும் இரத்த நாடிகளின் விட்டம் மிகக்குறைவானது. இதன் காரணமாக ஆண் உறுப்புகளுக்கு போதியளவு இரத்தோட்டம் தடைப்படும் போதும் ஆண்மைக்குறைவு ஏற்படுகின்றது.

எனவே ஆண்மைக்குறைவு ஏற்பட்ட நடுத்தர வயதினரின் இருதய நாடிகளும் எதிர்காலத்தில் பூரணமாக அடைபட்டு மாரடைப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் ஏற்படலாம் எனவே நடுத்தர வயதுடையவர்கள் இது விடயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனை பெறுதல் அவசியம்.

ஒரு சிலர் இவ்வாறு ஆண்மைத் குறைவு ஏற்படும் போது எதுவித வைத்திய ஆலோசனைகளுமின்றி பாமசிகளில் இலகுவாகக் கிடைக்கக்கூடிய timing  மாத்திரைகளை உபயோகின்றார்கள்.

இவ்வாறான மாத்திரைகளுக்குப் பல பக்க விளைவுகள் உள்ளன. விசேடமாக மாரடைப்பைத் தூண்டுகின்றன இருதய நோய், அதிக குருதி அழுத்தம், அதிக கொலஸ்ரோல் போன்ற நோய் இருப்பவர்களை Timing மாத்திரைகள் வெகுவாகப் பாதிக்கின்றன. இது விடயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்று மேலே குறிப்பிட்டுள்ளது போல் வேறு ஏதாவது நோய்கள் ஏற்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும்.

யுனானி வைத்தியத்துறையில் வேறு எந்த வைத்தியத்துறையிலும் இல்லாத அளவிற்கு ஆண்மைக்குறைவு பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் தகுந்த யுனானி வைத்தியர்களை நாடி அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இச்சிகிச்சையின் போது நரம்பைப் பலப்படுத்தக்கூடிய கொலஸ்ரோலைக் கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீர் செய்யக்கூடிய பக்க விளைவுகளற்ற இயற்கை மூலிகையினால் தயாரிக்கப்பட்ட பல மருந்துகள் உள்ளன. அத்துடன் நாம் சிகிச்சையளிக்கும் போது இருதயத்தின் தொழிற்பாடு உட்பட பல விடயங்களைக் கருத்திற் கொண்டு சிகிச்சையளிக்கின்றோம். ஒரு சிலருக்கு மனநல சிகிச்சையும் தேவைப்படலாம். உங்களுக்கு இது விடயமாக தகுந்த சிகிச்சை தேவைப்படின் நன்கு தேர்ச்சி பெற்ற யுனானி வைத்தியர் ஒருவரைச் சந்திப்பதற்கு உதவ முடியும்.

இறுதியாக வாசகர்களுக்கு ஒரு செய்தியாக தயவு செய்து வைத்திய ஆலோசனை இன்றி Timing மாத்திரைகளை உபயோகிக்க வேண்டாம் எனவும் மதுபானம், புகைத்தல் போன்றவைகள் உங்களது தாம்பத்திய வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் என்பதால் இப்பழக்கங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டுகிறேன்.




 


Post a Comment

Previous Post Next Post