Ticker

6/recent/ticker-posts

Ad Code



அளவுக்கு அதிகமாகப் பாசத்தைப் பொழிந்த பூனை... கையாளத் தெரியாமல் கைவிட்ட உரிமையாளர்...



அமெரிக்காவின் ஃபுளோரிடா (Florida) மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், அவரது செல்லப்பிராணியை விலங்குகள் காப்பகத்தில் கைவிட்டார்.

4 வயது ஜெர்ரி (Jerry) எனும் பூனை அதன் உரிமையாளர் மீது அளவுக்கு அதிகமாகப்  பாசத்தைப் பொழிந்தது. 

உரிமையாளருக்கு அது பிடிக்கவில்லை.

இப்போது புதிய உரிமையாளருடன் வசிக்கிறது ஜெர்ரி.

அதுகுறித்து வெளியிடப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் 8 மில்லியனுக்கும் மேல் பகிரப்பட்டுள்ளது.

அதில் "நான் மிகவும் பாசமானவன்.  அது என் உரிமையாளருக்குப் பிடிக்கவில்லை. எனது பாசம் அவருக்கு எரிச்சலை மூட்டியது. அவர் வீடு திரும்பும் வரை நான் கதவின் அருகே காத்திருந்தது, அதிகம் பேசியது, அனைத்தும் அவருக்குப் பிடிக்கவில்லை. அவரை நான் அதிகமாக நேசித்தேன். ஆனால் அவர் என்னை நேசிக்கவில்லை" என்று ஜெர்ரி எழுதியது போல் கடிதம் ஒன்று எழுதப்பட்டது.

"என்னை விரும்பும் எவரோ ஒருவர் இருப்பார் என நினைக்கிறேன்" என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. பின் குறிப்பும் இருந்தது: நான் ஓர் இல்லத்துக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கிறேன்."

Fox News அதனைத் தெரிவித்தது. 

காணொளி பதிவேற்றப்பட்ட 24 மணி நேரத்தில் ஜெர்ரிக்குப் புதிய வீடும் உரிமையாளரும் கிடைத்தன.

காணொளியைப் பார்த்த ஒருவர் ஜெர்ரியைத் தத்தெடுத்ததாகக் கூறப்பட்டது.
mediacorp



 


Post a Comment

0 Comments