
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஏலத்தில் இவரை பெங்களூரு அணி ரூ. 3.40 கோடிக்கு பெற்றிருந்தது. மகளிர் ஐபிஎல்லுக்கான ஏலத்தில் மிக அதிகமான தொகைக்கு வாங்கப்பட்ட வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா உள்ளார். இந்நிலையில் அவரை கேப்டனாக நியமித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, அணியின் சேர்மன் பிரத்மேஷ் மிஷ்ரா கூறியதாவது- ப்ளே போல்டு எனப்படும் தைரியத்துடன் விளையாட வேண்டும் என்பதை பெங்களூரு அணி அடிப்படையாக கொண்டுள்ளது. இதற்கு ஸ்மிருதி மந்தனா மிகவும் ஏற்றவர். அவர் பெங்களூரு அணியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார். என்று கூறியுள்ளார்.
கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ஸ்மிருதி மந்தனா அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது- பெங்களூரு அணியை வழி நடத்துவது குறித்து விராட் கோலியும், டூப்ளசிசும் என்னிடம் பேசினார்கள். இது எனக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. பெங்களூரு அணியின் நிர்வாகம் எனக்கு மிகச்சிறந்த பொறுப்பை அளித்துள்ளது. இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக கொள்கிறேன். ரசிகர்களிடம் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். மகளிர் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வெல்வதற்கு 100 சதவீதம் எனது பங்களிப்பை கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு டி20 தொடர்களில் விளையாடிய அனுபவம் ஸ்மிருதி மந்தனாவுக்கு உள்ளது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான இவர், 113 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2,661 ரன்களை குவித்துள்ளார். சராசரி 27.15 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 123.19. ஐசிசியின் 2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீராங்கனை என்ற விருதை இவர் பெற்றுள்ளார். அந்த ஆண்டில் 22 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 855 ரன்களை குவித்ள்ளார். 2018-இல் அவருக்கு அர்ஜுனா விருது அளிக்கப்பட்டது.
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments