Ticker

6/recent/ticker-posts

உருக்குலைந்த துருக்கியேவில் மீண்டும் நிலநடுக்கம்


துருக்கியேவை மீண்டும் இரண்டு நிலநடுக்கங்கள் உலுக்கியுள்ளன. 

சிரியா எல்லை அருகே உள்ள Hatay வட்டாரத்தில் புதிதாக 6.4, 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் நேர்ந்தன. மூவர் மாண்டனர். 

சிறிது நேரம் நிலநடுக்கம் நீடித்ததை உணர்ந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் கூறினர். 

புதிய நிலநடுக்கங்களில் மேலும் பல கட்டடங்கள் சேதமடைந்தன. குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டுப் பதறியடித்து வெளியேறினர். 

சிரியா, எகிப்து, லெபனான் எல்லை வரை நில அதிர்வுகள் உணரப்பட்டன. 

இரண்டு வாரத்துக்கு முன்னர் துருக்கியேவையும், சிரியாவையும் வலுவான நிலநடுக்கங்கள் உலுக்கியதில் சுமார் 47 ஆயிரம் பேர் மாண்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர்.

ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. 

SOURCE AFP



 



Post a Comment

0 Comments