இம்ரான் கான் வீட்டு கதவு புல்டோசர் மூலம் இடிப்பு.. 10 ஆயிரம் போலிஸாரால் அடித்து விரட்டப்பட்ட தொண்டர்கள் !

இம்ரான் கான் வீட்டு கதவு புல்டோசர் மூலம் இடிப்பு.. 10 ஆயிரம் போலிஸாரால் அடித்து விரட்டப்பட்ட தொண்டர்கள் !


பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த எஅண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதிவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மேலும் அவரை எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் அவரது கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென மர்ம நபர்கள் சிலர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது பதவிக்காலத்தில் வெளிநாட்டு பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் ஆஜராகாத நிலையில் அவருக்கு மாவட்ட நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இதனால் இம்ரான் கைதாவதை தடுக்க லாகூரில் ஜாமன் பூங்கா பகுதியில் உள்ள வீட்டில் அவரது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

இதனால் அவர்களை களைக்க ஆயுதம் ஏந்திய 10 ஆயிரம் போலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் இம்ரான் வீட்டை சுற்றி இருந்த தொண்டர்கள் அடித்து விரட்டிய போலிஸார் புல்டோசர் மூலம் இம்ரான் வீட்டின் கதவை இடித்து தள்ளி உள்ளே புகுந்தனர்.

மேலும் வீட்டில் இருந்த தொண்டர்களையும் அடித்து விரட்டிய போலிஸார் அங்கிருந்த பெட்ரோல் வெடிகுண்டுகள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kalaignarseithigal




 



Post a Comment

Previous Post Next Post