தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு வெளிநாடுகளில் வேலைகளைத் தேடத் தொடங்கியுள்ளனர்

தொழில்நுட்ப ஊழியர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு வெளிநாடுகளில் வேலைகளைத் தேடத் தொடங்கியுள்ளனர்

பொறியியலாளர்கள் மற்றும் மின்சார அத்தியட்சகர்கள் உட்பட குறைந்தது ஐந்து தொழில்நுட்ப ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் வேலையை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைகளைத் தேடத் தொடங்கியுள்ளனர் என்று இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் விரக்தி காரணமாக இவ்வாறு சேவையில் இருந்து விலகுவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மின்சார சபையில் இருந்த 24,000 ஊழியர்கள் தற்போது சுமார் 22,000 ஆக குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்தார்.

மேலும், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது அறுபதாகக் குறைக்கப்பட்டதால், அறுபதுகளில் ஓய்வு பெறும் நபர்களைத் தவிர, தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையில் பணியாற்றும் ஊழியர்களும் இவ்வாறு வெளிநாட்டு வேலைகளை நாடுவதாகவும் அவர் கூறினார்.

மின்சார சபையில் பணிபுரிபவர்களில் சுமார் ஐந்து ஊழியர்கள்  வெளிநாடு செல்வதற்காக தினமும் பணியிலிருந்து விடைபெறுவதாக ஜெயலால் குறிப்பிட்டுள்ளார்.




 



Post a Comment

Previous Post Next Post