இளைஞரின் வயிற்றில் வொட்கா போத்தல்; அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

இளைஞரின் வயிற்றில் வொட்கா போத்தல்; அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

நேபாளத்தில் 26 வயது இளைஞரின் வயிற்றில் இருந்து வொட்கா போத்தல் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. 

நேபாளத்தில் குஜாரா நகராட்சியை சேர்ந்த நுர்சத் மன்சூரி என்பவருக்கு அண்மையில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவரின் வயிற்றில் போத்தல் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

பின்னர் இரண்டரை மணித்தியால அறுவை சிகிச்சைக்கு பிறகு நுர்சத் மன்சூரியின் வயிற்றில் இருந்த வொட்கா போத்தலை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். 

போத்தல் அவரது குடலைத் துண்டித்து, மலக்கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியதாகவும், இருப்பினும் அவர் தற்போது அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார். 

மன்சூரியின் நண்பர்கள் அவரைக் குடிக்க வைத்துவிட்டு, ஆசனவாய் வழியாக போத்தலை வயிற்றுக்குள் வலுக்கட்டாயமாக திணித்திருக்கலாம் என்று பொலிஸார் கூறியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக ஷேக் சமீம் என்பரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மன்சூரியின் நண்பர்கள் சிலரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 newsfirst



 



Post a Comment

Previous Post Next Post