துபாயின் பிரபலமான உயர்மாடி ஹோட்டலின் உச்சியில் விமானத்தைத் தரையிறக்கி சாகசம்

துபாயின் பிரபலமான உயர்மாடி ஹோட்டலின் உச்சியில் விமானத்தைத் தரையிறக்கி சாகசம்


போலந்தைச் சேர்ந்த லூக்கஸ் ஸெப்பியேலா (Lukasz Czepiela) எனும் விமானி துபாயிலுள்ள Burj Al Arab Jumeirah ஹோட்டல் உச்சியில் விமானத்தைத் தரையிறக்கி சாகசம் செய்துள்ளார்.

அந்த ஹோட்டல் 56 மாடிகளைக் கொண்டது. 27 மீட்டர் அகலம் மட்டுமே கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில்  லூக்கஸ் தமது இலகுரக விமானத்தைத் தரையிறக்கினார்.

வழக்கமாக விமான ஓடுபாதைகள் பல நூறு மீட்டர் நீளத்தில் இருக்கும். ஆனால் இவர் தரையிறங்கிய இடமோ மிகவும் குறுகலாக இருந்தது. அது தமக்குப் பெரும் சவாலாக இருந்ததாக லூக்கஸ் தெரிவித்தார்.

அந்தச் சாகசத்தைப் புரிய 2021ஆம் ஆண்டில் இருந்து திட்டமிடப்பட்டது. அதற்காக 650 முறை தரையிறங்கும் பயிற்சிகள் நடைபெற்றன.
  

CNN


 



Post a Comment

Previous Post Next Post