ஆஸ்திரேலியாவில் மாண்டுகிடந்த மில்லியன் கணக்கான மீன்கள் - அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள்

ஆஸ்திரேலியாவில் மாண்டுகிடந்த மில்லியன் கணக்கான மீன்கள் - அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள்


ஆஸ்திரேலியாவில் ஒரு விசித்திரத் துப்புரவுப் பணி. 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கரை ஒதுங்கின மில்லியன் கணக்கான மீன்கள்.

அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளனர் ஊழியர்கள்.

வெப்பமான வானிலையில் மீன்களுக்கு அதிக அளவில் உயிர்வாயு தேவைப்படுகிறது.

ஆனால், ஆஸ்திரேலியாவை அண்மையில் பாதித்த மோசமான வெள்ளத்தால் உயிர்வாயு அளவு கடுமையாகக் குறைந்துள்ளது.

அதுவே மீன்களின் மரணத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அழுகிக்கொண்டிருக்கும் மீன்களை அகற்ற அதிகமான துப்புரவு ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர்.

எனினும், மாண்ட மீன்கள் அனைத்தையும் கரையோரத்திலிருந்து நீக்குவது சாத்தியம் இல்லாத செயல் என்று காவல்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆதாரம் : AGENCIES




 



Post a Comment

Previous Post Next Post