
சென்ற வார தொடரில் அற்றால் அளவரிந்துஉணவு உண்டால் நோயின்றி வாழலாம் என்பதைப் பற்றி பார்த்தோம்.
தனி மனிதன் மட்டுமின்றி சமுதாயமே ஆரோக்கியமாக வாழவும் நோய்கள் வரும் முன் காக்கவும் ,வந்தபின் நீக்கவும், மருந்து மாத்திரைகளில் இருந்து விடுபடவும், மனிதன் எப்படி எல்லாம் வாழலாம், எப்படி எல்லாம் வாழக்கூடாது ,என்பதையும் இயற்கை அடிப்படையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையான தரமான உணவிலும், நிதானமாக தெளிவாக உண்ணும் முறையிலும் ,உணவு சார்ந்த பழக்க வழக்கங்களிலும் தான் ஒருவனின் நிலையான ஆரோக்கியமும் நீடித்த ஆயுளும் அடங்கியுள்ளது என்பதை நாம் ஒவ்வொரு வாரமும் பார்த்துக் கொண்டு வருகிறோம்.
அதாவது செயற்கையான தரமற்ற உணவும் உண்ணும் முறையில் உள்ள தவறுகளும், அறியாமையும் அவசரமும் எல்லாவற்றையும் கொட்டி இரைப்பையை நிரப்பி விட வேண்டும் என்ற பேராசையும் அளவுக்கு அதிகமான ருசிக்கு நாக்கை அடிமைப்படுத்தும் மனோ இச்சையும் தான் எல்லா நோய்களுக்கும் மூல காரணமாக அமைகிறது.
அவ்வாறான முறைகேடான ஜீரணம் தொடர்ந்து நிலைக்குமாயின் எந்த நோயும் எளிதில் வரும் வாய்ப்பு உண்டு வயிற்று கோளாறுகளும் வாயு தொந்தரவும் மட்டும்தான் வரும் என்பதல்ல.
எவ்வளவுக்கு எவ்வளவு நாம் உண்ணும் உணவிலும் உணவு சார்ந்த பழக்க வழக்கங்களிலும் ஒரு தெளிவான இயல்பான ஒழுங்கை கடைபிடிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம் உடலும் மனமும் ஆரோக்கியமும் பெறும் சீரிய சிந்தனைகள் வரும் அந்த ஆரோக்கியமும் சிந்தனைகளும் மாத்திரமே நமது சுகமான வாழ்வுக்கு அடிப்படையாய் அமையும்.
எனவே உணவைப் பற்றிய உண்மைகளை குறித்து அடுத்த வாரம் நலம் வாழ தொடரில் காணலாம்.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).


.gif)



0 Comments