இன்றைய நவீன உலகமானது இணையப் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.கல்வி ,மருத்துவம்,சுகாதாரம்,விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் இதன் பயன்பாடானது பெருகி வருகின்றது.சுருக்கமாகக் கூறின் “உள்ளங்கையில் உலகம்” என்றாகிவிட்டது.எனினும் பொழுதுபோக்கு என்று நோக்குமிடத்து இணையப் பயன்பாடானது பல்வேறு சமூக ஊடகங்களின் தளமாக அமைந்துள்ளது.இவற்றினை சமூக வலைதளங்கள் என்று அழைப்பர்.பேஸ்புக்,டுவிட்டர்,வாட்ஸ்அப்,லிங்டுஇன்,இன்ஸ்டாகிராம்,ஓர்கு ட்,மைஸ்பேஸ்,கூகுள் +,பிளிக்கர்,ரெடிட் என்பன சமூக வலைதங்களுக்கான சில உதாரணங்களாகும்.ஆகவே
நாம் அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ஒரு பாவனையாளர் என்ற வகையில் சமூக வலைதளங்கள் என்றால் என்ன?,அவற்றின் பயன்கள் எவை?,சமூக வலைதளங்களின் பாவனையால் ஏற்படும் விளைவுகள் எவை?அதன் தாக்கம் சமூகத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றது?அதற்கான தீர்வுகள் எவை என்பன குறித்து அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
அந்த வகையில் நோக்குமிடத்து சமூக வலைதளங்கள் என்பவை “ஓத்த கருத்துடையோர் அல்லது செயற்பாடு கொண்டோரின் சமூகத்தை வளர்கவும் அவர்களிடையே உள்ள சமூக பிணைப்புக்களை வெளிப்படுத்தவும் வழி செய்யும் ஒரு இனைய சேவையாகும்”என்று குறிப்பிடப்படுகின்றது”. அவற்றுள் முக்கியமான சிலவற்றை பார்ப்போமானால்,
லிங்க்டின்
இது வணிக ரீதியான சமூக வலைத்தளமாகும்.இத்தளத்தின் மூலம் வெவ்வேறு நாடுகளில் பணிபுரியும் நபர்கள்,தொழிலதிபர்கள், சிறு தொழில் உற்பத்தியாளர்கள், பல்வேறு வகையான சேவையை அளிப்பவர்கள் என பதவிகளில் இருப்போர் அனைவரும் தத்தம் தொழில், வேலை, சேவை ரீதியாக இணைக்கப்பட்டு தத்தம் விபரங்களை பகிர்வதற்கு லிங்க்டின் உதவுகிறது. இத்தளத்தின் மூலம் வணிகத்தொடர்புகள், தகவல் பரிமாற்றங்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் சிறப்பு அறிமுகங்கள், புதிய தொழில் வாய்ப்புகள் போன்றவை எளிதாக கையாளப்படுகின்றன.
பேஸ்புக்
2004 இல் தொடக்கி வைக்கப்பட்ட இனைய வழி சமூக வலையமைப்பாகும்.13 வயதுக்கு மேற்பட்டவார்கள் அனைவரும் இதில் பதிவு செய்து கொள்ள முடியும்.
மின்னஞ்சல்
இது மின்னணுத் தொடர்புச் சாதனங்கள் மூலம் செய்திகளை எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல் போன்றவற்றைச் செய்யும் முறையாகும்.
டுவிட்டர்
டுவிட்டர் என்பது டுவீட் (ட்வீட்) என்று அழைக்கப்படும் 140 வரியுருக்களாலான குறுகிய செய்திகளை அனுப்பும், வாசிக்கும் வசதிகளைப் பயனர்களுக்கு வழங்குகின்ற ஒரு தொடர் குழு வலையமைப்புச் சேவை ஆகும்.
கூகுள்+
என்பது கூகுள் நிறுவனம் தயாரித்து வழங்கும் சமூக வலையமைப்புத் தளம் ஆகும். இதன் மூலம் நாம் நமது கருத்துக்கள், புகைப்படங்கள், காணொளிகள், இணையதள உரலிகள் ஆகியவற்றை நமது வட்டத்தில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
மேலும் சமூக ஊடகம் என்பது சமூக ஊடகத் தளங்கள் அல்ல மாறாக அவற்றை பயன்படுத்தும் மக்களும் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களும்தான் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகின்றது.தகவல் தொடர்புக்கும் சரி நட்பு வட்ட உரையாடலுக்கும் சரி சமூக ஊடகங்களைதான் அதிகம் பயன்படுத்துகிறோம்.ஆனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறை பற்றி நாம் எதனை அறிந்திருக்கிறோம்? என்று அறியும் பட்சத்தில் இந்தியா ,பிரசில், சீலி, சீனா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பதினைந்து நாடுகளில் 15 மாதங்கள் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.இதில் சமூக ஊடகப் பயன்பாட்டினால் தனி நபர்கள் சுய நாட்டம் கொண்டவர்களாகவும் சுய விரும்பிகளாகவும் மாறி இருப்பதாகக் கருதப்படும் நிலையில் இந்த ஆய்வு பெரும்பாலும் பாரம்பரிய குழு ,குடும்ப,இன உனர்வுகள் என்பனசமூக ஊடகப் பயன்பாட்டினாலே பிரதிபலிக்கின்றது என்று கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களானவை போதைப்பொருள் போன்றது ஏனெனில் இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என்று வயது வித்தியாசமின்றி அனைவரும் சமூக ஊடக வலையமைப்புப் பாவனைக்குள்ளாகின்றனர்.உதாரணமாக ஒரு குடும்பத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ளவர்கள் அனைவரும் இன்று ஒரு வீட்டில் இருந்து கொண்டே வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் பேசிக்கொள்ளும் அளவிற்கு காலம் மாறிவிட்டது.மற்றும் இன்று சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கையும் அரிதாகவே காணப்படுகின்றது.
ஆரம்ப காலங்களில் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ள புறா மூலம் தூது ,கடிதம் என்பவற்றையே ஊடகங்களாக பயன்படுத்தினர்.ஆனால் இன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டே விரும்பியவருடன் விரும்பிய நேரத்தில் தொடர்புகளை மேற்கொள்ள இந்த சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.உலகில் மொத்த சனத்தொகையில் 200 கோடி மக்கள் இந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதாகவும் இதில் 190 கோடி பேர் ஸ்மார்ட் போன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாகவும் 1 நொடிக்கு 12 பேர் புதியவர்களாகவும் இவற்றில் இணைந்து கொள்கின்றனர்.மேலும் இளைஞர்களில் 90% க்கு மேற்பட்டோர் இவ்வாறு சமூக ஊடகங்களை பயன்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது.
இது பற்றி 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பிட்ஸ்பரிக் பல்கலைக்கழக மயக்கவியல் துறை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஒருவர் சமூக வலைதளங்களில் பயன்பாட்டில் இருப்பதாகவும் அவ்வாறு இருப்பதால் அவருக்கு சமூகத்தில் இருந்து தனிமைப்படும் உணர்வும் அதிகரிக்கும் என்று அறியப்பட்டது.அதுமட்டுமன்றி 60% ஆன பணியாளர்கள் சமூக வலைதங்களையே தனது பணிகளுக்காக பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் 2012 ஆம் ஆண்டின் கனக்கெடுப்பின் படி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 147 கோடியாகவும் 2013 இல் இந்த எண்ணிக்கை 173 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.இதனையடுத்து 2014 ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி 17.5% மாணவர்கள் இணைய பாவனையை பயன்படுத்துவதாகவும் இவர்கள் 15-18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 20-24 வயதுக்குட்பட்டவர்களின் விகிதாசாரம் 25.3% உள்ளதென்றும் தெரியவந்துள்ளது.
மேலும் இனைய பாவனை தொடர்பில் 2015 ஆம் ஆண்டின் சர்வதேச புள்ளி வங்கியின் அறிக்கையின் பிரகாரம்உலக சனத்தொகையில் 317 பில்லியன் பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதாகவும் இதில் சீனா முதலிடத்திலும் இரண்டாவதாக ஐக்கிய அமெரிக்காவும் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் அறிய வந்துள்ளது.மற்றும் அபிவிருத்தியடைந்த நாடுகள் 78% ம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 32% ம் மூன்றாம் உலக அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் 3.3% ம் இணையப் பயன்பாடு காணப்படுவதாகவும் இவற்றுக்கு எதிராக உலக சனத்தொகையில் 4 பில்லியன் பேர் எந்தவித இணையப்பயன்பாடு அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
இலங்கையில் மதிய வங்கியின் தகவல்களின் பிரகாரம் 70% மானோர் சமூக வலைத்தளப் பயன்பாடு கொண்டவர்களாகவும் இதில் 89% பேஸ்புக் உம் 3.86% யூடியூபும் 3.85% பின்டஸ்ரர் உம் 2.13% இல் டுவிட்டர் 0.3% இல் இன்ஸ்டாகிராம் மற்றும் 0.27% இல் கூகிள் நெட்டும் பாவனையில் இருப்பதாக 2018 பெப்ரவரி மாதம் வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.எது எவ்வாறிருப்பினும் சமூக வலைத்தளங்களின் பாவனை குறித்த தகவல்கள் எதிர்காலங்களில் அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
எது எவ்வாறு இருப்பினும் சமூக வலைதளங்களின் மூலம் கிடைக்கக்கூடிய பயன்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.அதாவது
====
உலகத்தில் எந்த இடத்திலும் நடை பெரும் விடயங்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிதல்.
நண்பர்கள் ஒருவருக்கொருவர் நட்புடனும் தமது சுய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் முடிதல்.
தொலைவில் உள்ள உறவினர்களுடன் மிகத் துரிதமாகத்தொடர்பு கொள்ள முடிதல்.
மக்கள் இனம்,மதம்,மொழி என்ற வேறுபாடின்றி ஒன்றிணைந்து பழகும் சந்தர்பங்கள் ஏற்படுதல்.
தகவல்கள் தாமதமின்றி உடனுக்குடன் பரிமாறிக்கொள்ளமுடிதல்.
கல்வி நடவெடிக்கைகளின் போது மாணவர்கள் தமக்குத் தேவையான பல விடயங்களை பெற்றுக்கொள்ளவும் தமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பில் ஏனைய நண்பருடன் கலந்துரையாடவும் முடிதல்.
வணிக நடவெடிக்கைகளின் போதுபயன்படுதல்.
சமூகத்தில் தமக்கு ஈடுபாடு உள்ளதைப் போன்று ஒரு உணர்வு வருதல்.
தமது சுய அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் சுதந்திரமாக தெரிவிக்க முடிதல்.
இவ்வாறு பல்வேறுபட்ட வகைகளில் சமூக வலைதளங்கலானது எமக்குப் பயன்படும் நேரத்தில் இவற்றை பயன்படுத்துவதனால் ஏற்படும் விளைவுகளும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.அதாவது,
==
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பிரதானமாகப் பயன்பாட்டில் உள்ள பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்றவற்றிலேயே தமது நேரத்தை செலவழிக்கின்றனர்.இதனால் நேரம் வீண்விரயமாவதுடன் அவர்களின் கல்வி நடவடிக்கைகளும் பாதிப்படைகின்றது.
பொதுவாக ஒருவர் இணைய சேவையில் இணையும் நேரத்தில் அவரின் தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டிய சந்தர்பத்தில் அவை பாதுகாப்பாக இருக்குமா? அல்லது வேறு எவராலும் களவாடப்படுமோ? என்பது குறித்து அச்சம் மற்றும் அவ்வாறான நடவெடிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கப்படாமை.
சமூக ஊடகங்களிடையே தமது நேரத்தையும் காலத்தையும் பயன்படுத்துவதால் குடும்பம் மற்றும் நண்பர்களிடையே இணக்கம் இன்றி உறவுகளுக்கு இடையில் விரிசல் ஏற்படல்.
இனந்தெரியாத நபர்களுடன் உறவுகளை ஏற்படுத்தி இறுதியில் ஏமாந்து போதல்.
அதிக நேரம் கணிணி,கையடக்கத்தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதால் உடல் உபாதைகள்ஏற்படுதல்.
என்று பொதுவாக இதன் விளைவுகள் பற்றிக் குறிப்பிட்டாலும் இவற்றில் பிரதானமாக நோக்கப்பட வேண்டியது கலாசார சீர்கேடுகலேயாகும்.அந்த வகையில் இன்றைய நவீன காலத்தில் ஆண் ,பெண் என்ற வேறுபாடின்றி அனைவரும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகிறார்கள்.பொதுவாக இங்கு தாங்களே உரிமையாளராக காணப்படுவதால் ஒருவர் பொய்யான தகவல்களை வழங்கி தமக்கு ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள முடியும்.இதில் ஆண் பெண் போன்றும் பெண் ஆண் போன்றும் பயன்படுத்துகிறார்கள்.இதனால் உண்மையான ஆளடையாளம் இன்றி தவறான உறவு முறைகள் ஏற்பட்டு ஏமாற்று வேலைகள் இடம்பெறுகிறது.அதிலும் பெண்கள் குறிப்பாக இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
மேலும் இனம் தெரியாத ஒரு நபருடன் பழக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் ஆளாகின்றார்கள்.இறுதியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் இன்று அடிக்கடி நடந்த வண்ணமே உள்ளன.மேலும் ஆபாசப் படங்களையும் விடியோக்களையும் எந்தவித கட்டுப்பாடுமின்றி பகிர்வதால் இளைஞர்கள் மத்தியில் தீய உணர்வுகளும் சிந்தனைகளும் ஏற்படக் காரணமாக அமைகின்றது.
மேலும் தங்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் ஒருவர் தெரிவிக்கும் பட்சத்தில் அதற்கெதிராக இன்னும் ஒருவர் தம்மை ஏளனம் செய்வதனால் மன அழுத்ததிற்கும் உள்ளாகின்றனர்.அதுமட்டுமன்றி இன்று திருமணமான ஆண்கள் ,பெண்கள் இன்னொருவருடன் தகாத முறையில் தொடர்புகளை வைத்துக் கொள்ளவும் இந்த சமூக வலைதளங்களே பிரதான காரணமாக உள்ளது.ஒரு ஆய்வின் படி அதிகமான திருமணங்கள் விவாகரத்தில் முடியவும் கணவன் மனைவிக்கிடையில் மணமுறிவு ஏற்படவும் வாட்ஸ்அப்பே காரணமாகும் எனக் குறிப்பிடப்படுகின்றது.மேலும்கொடுமைகளுக்கு எதிரான தொண்டு நிறுவனமான டிச் தி லேபிள் அமைப்பு நடத்திய ஆய்வில் சமூக வலைதளங்களின் மூலம் இலைஞ்சர்கள் அதிக பதட்டம் உடையவர்களாக மாறுவதாக தெரிய வந்துள்ளது. இதில் இணையத்தின் மூலம் 30% பேர் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இளைஞ்சர்களின் மன நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் முக்கியமானது என்று ஐக்கிய ராஜ்யத்தில் நடத்தப்பட்ட ஆய்வு கூறுகின்றது.
அதுமட்டுமன்றி சமூக இனங்களிக்கிடையே காணப்படும் நல்லுறவு கெடுவதற்கும் , மோதல்கள் தோன்றுவதற்கும் இதுவே அடிப்படையாகக் காணப்படுகின்றது.அண்மையில் எம் நாட்டில் சிங்கள – முஸ்லிம் இனங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்களுக்கு காரணமாக அமைந்ததும் இவ்வாறான சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்ட போஸ்ட்களும் ஸ்டேடஸ்களுமே.இதன் விளைவால் பேஸ்புக்,வாட்ஸ்அப் போன்ற ஒரு சில வலைதளங்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்கு முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டமையும் எடுத்துக் காட்டத்தக்க விடயமாகும்.
மேலும் சமுக வலைதளங்களைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிகள் மேற்கொள்ளப்படுகின்றன.அவை குறித்து நாம் விழிப்புடன் இருத்தல் வேண்டும்.பேஸ்புக்,ஈமெயில் போன்றவற்றின் ஊடாகவே இவ்வாறான மோசடிகள் அதிகளவில் இடம்பெறுகின்றது.அதாவது எமது நண்பர்களிடம் இருந்து வரும் அழைப்புக்களைப் போன்று அவர்களின் முகநூல் பக்கத்தைப் போன்று புதியவர்களிடம் இருந்து எமக்கு வரும் அழைப்புக்கள் மூலம் எம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளல்.இது போன்றே ஈமெயில் மூலம் எமக்கு பொய்யான முகவரியில் இருந்து வரும் ஈமெயில் மூலம் எமது வங்கிக் கணக்கு,இனைய வர்த்தக கணக்கு போன்றவற்றில் மோசடி செய்து பணம் திருடுவார்கள்.கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆறு மாதத்திற்கு ஒரு முறை நடத்துகின்ற இணைய பாதுகாப்பு பற்றிய ஆய்வு அறிக்கையின் படி 60 கோடி கணினிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும் போது ஒவ்வொரு ஆண்டும் சமூக வலைதளங்கள் மூலம் நடை பெறுகின்ற மோசடிகலானது 12 மடங்கு அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதிகமாக வளர்ந்து வரும் வலைத்தளமான பேஸ்புக்கிற்கு அடுத்தபடியாக காணப்படுவது பேஸ்புக் மெசஞ்சார் ஆகும்.தற்போது 80 கோடிப் பேர் இந்த அப்ளிகேசனை பயன்படுத்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த நீல்சன் நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில் குறிப்பிடப்படுகிறது.ஆனால் உண்மையில் பாரியளவிலான விளைவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைவது சமூக வலைதளங்கள் அல்ல மாறாக அவற்றைப் பயன்படுத்தும் பாவனையாளர்கலேயாகும்.பொதுவாக மனிதர்களாகிய நாம் எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நாணயத்தில் இரு பக்கங்கள் போன்று நன்மையும் காணப்படும் தீமையும் காணப்படும்.அறிவாற்றல் மிக்க மனிதர்கள் என்ற வகையில் பயனுள்ள விடயங்களை மாத்திரம் பயன்படுத்தினால் எந்த விதமான விளைவுகளும் தானாகவே ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இல்லை.மேலும் ஒருவர் சமூக வலைதளங்களில் பெரும்பாலும் தமது சொந்த விடயங்கள்,பணிபுரியும் இடம் என்பவற்றை பதிதல் கூடாது.மற்றும் ஒருவர் சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தினால் அதை சுட்டிக்காட்ட வேண்டும் என்றும் அதோடு மனநல பிரச்சினை உள்ள பயனர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்று பொது சுகதாரதிர்கான றோயல் செகியுரிட்டி இனால் அறிவிக்கப்படுகின்றது.எனவே நாம் மனிதர்கள் என்ற வகையில் ஒருவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவருடன் நல்ல முறையில் அணுகும் போது எவ்வாறான கலாச்சார சீர்கேடுகளும் ஏற்படுவதற்கு சமூக வலைதளங்கள் காரணமாக அமையாது என்பதை புரிந்து கொள்ளல் அவசியமாகும்.
Source;newsplus
April 19, 2018
(எம்.பி.சாஹிறா பானு)
0 Comments