வருமானம் இல்லாத வயதான சிங்கப்பூரர்கள் பிள்ளைகளிடம் இருந்து நிதியுதவி பெறுவதற்குப் பெற்றோர் பராமரிப்புச் சட்டத்தில் இடமுண்டு.
பெற்றோர் அதனைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கச் சில மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
பிள்ளைகளைத் துன்புறுத்திய, கைவிட்ட அல்லது புறக்கணித்த பெற்றோர், சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தாமல் இருக்கப் புதிய பரிந்துரைகள் உதவும்.
மரீன் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சியா கியான் பெங் (Seah Kian Peng) அது குறித்து இன்று (9 மே) நாடாளுமன்றத்தில் பேசினார்.
அத்தகைய பெற்றோர் தங்கள் கடமையை நிறைவேற்றவில்லை என்றார் அவர்.
இந்த மாற்றங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்து அவர்களுக்குத் தேவையற்ற மனவுளைச்சலை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளும் என்றார் திரு. சியா.
சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவருவது குறித்துப் பொதுமக்களிடம் கருத்துகள் திரட்டப்பட்டன.
இரண்டு சுற்றுக் கருத்துத் திரட்டுக்குப் பிறகு பணிக்குழு மாற்றங்களை முன்வைத்துள்ளது.
mediacorp
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments