சென்ற வாரத் தொடரில் எவ்வாறு வாயு கோளாறு அஜீரணம் மற்றும் வாயு கோளாறு ஏற்படுகிறது என்பதை குறித்து நாம் அலசி ஆராய்ந்து வருகின்றோம்.
அதன் தொடர்ச்சியாக நமது வயிற்றில் ஹெச் சி எல் என கூடிய செரிமான அமிலமான ஹைட்ரோ குளோரிக் ஆசிட் நாம் உண்ணக்கூடிய உணவை கரைத்து உணவு செரிக்க கூடிய பக்குவத்திற்கு மாற்றி சிறுகுடலுக்கு அனுப்பக்கூடிய பணியை செய்கிறது.
இந்த நிலையில் செரிமான அமிலம் சுரக்கக்கூடிய அளவு குறையும் பொழுதும், அமில சுரப்பு குறைவாக இருக்கக்கூடிய நிலையிலும் நாம் உண்ணும் உணவு சரியான நிலையில் செறிக்க இயலாமல் போகின்றது.
இந்த நிலையில் தான் நமக்கு அஜீரணம் மற்றும் வயிறு மந்த நிலையும் வாயு கோளாறும் ஏற்படுகிறது. அஜீரணம் அதிகமான உடன் அதன் விளைவு வாயு தொந்தரவு இரைப்பை மற்றும் சிறுகுடலில் உணவு ஜீரணமாகாமல் அப்படியே இருக்கும் நிலையில் வாயு கோளாறு ஏற்படுகிறது.
நாம் உண்ணும் மாவுச்சத்து உணவுகளான கார்போஹைட்ரேட்ஸ் (கார்பன், ஹைட்ரஜன், கலவை)சர்க்கரை உணவுகள் அதிக அளவுக்கு அதிகமாகும் போது செரிமான அமிலம் குறைவாக சுரக்கும் போதும் உணவு ஜீரணம் சில ஜீரணமாவதில் சில சமயம் சிரமப்படும் அதன் விளைவு அஜீரணம் அதிக நேரம் உணவுப் பொருள்கள் செரிமானமாகாமல் குடலில் தங்குகின்றது. செரிமானத்திற்காக சுரந்த அமிலம் மற்றும் சுரக்கும் நீரின் செயலால் வாயு உருவாகிறது. இதில் ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அதிகமாக இருக்கிறது.
இது சில சமயம் வாய் வழியாக ஏப்பமாகவும் மலக்குடல் வழியாக வாயுவாகவும் வெளியேறுகிறது சில சமயம் ஓசையுடனும் மிகவும் நாற்றம் ஆகவும் வெளியேறுவதால் நாம் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றோம்.
மேலும் அஜீரணமும் வாயு கோளாறும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை அதனால் பசிக்கும்போது பொசித்து உண்ணும் பொழுது தான் சரியான அமிலச்சுரப்பும் சரியான ஜீரணமும் ஒன்றாக அமையும்.
அதிகமான கார்போஹைட்ரேட்ஸ்கள் அதாவது மாவு பொருட்கள் உண்பதை தவிர்ப்பதும் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் இந்த அஜீரணக் கோளாறில் இருந்து நாம் விடுபடலாம் .
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. .
டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
0 Comments