Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆஷஸ் முதல் டெஸ்ட்.. கைவசம் இருந்த 2 விக்கெட்.. போராடி வென்ற ஆஸி.. இங்கிலாந்துக்கு அதிர்ச்சி

பர்மிங்காம் : ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முழு தீனி போட்டுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு இருந்ததால், ரசிகர்கள் சீட்டின் நுணியில் அமர்ந்தே பார்த்தார்கள்.

 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்தது. முதல் பந்திலேயே ஷாக் கிராலி பவுண்டரி அடிக்க, எங்களுடைய ஆட்டம் இப்படி தான் இருக்கப் போகிறது என்பதை இங்கிலாந்து சொல்லிவிட்டது.

இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி விக்கெட்டுகளை இழந்தாலும், ரன் குவிக்கும் வேகத்தை குறைத்து கொள்ளவே இல்லை. ஜோ ரூட் அபார சதத்ததால், இங்கிலாந்து அணி முதல் நாளில் முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த போது தைரியமாக ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்தார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடியது. இதில் உஸ்மான் கவாஜா அபாரமாக விளையாடி 141 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். எனினும் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

7 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்சில் தடுமாறியது. இதில் ஜோ ரூட், ஹாரி புருக் ஆகயோர் தலா 46 ரன்களும், ஸ்டோக்ஸ் 43 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி தங்களது கடைசி இன்னிங்சில் விளையாடியது.

107 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற ஸ்கோருடன் , கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. மழை மற்றும் ஈரப்பதமான ஆடுகளம் காரணமாக, ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்கள் பொறுப்பாக விளையாடி வந்த நிலையில், நைட் வாட்ச்மேன் போலாந்த் 20 ரன்களில் வெளியேறினார். இங்கிலாந்துக்கு பயம் காட்டி வந்த டிராவிஸ் ஹேட் 16 ரன்கள் எடுத்திருந்த போது மோயின் அலி பந்தில் கேட்ச் ஆனார். இதே போன்று அரண் போல் நின்று கொண்டு இருந்த உஸ்மான் கவாஜாவும் 65 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அலெக்ஸ் கேரியும் 20 ரன்களில் ஜோ ரூட் பந்துவீச்சில் அவரிடமே பிடிப்பட்டார். இங்கிலாந்து வெற்றிக்கு கைவசம் 2 விக்கெட்டுகள் தேவைப்பட, ஆஸ்திரேலிய வெற்றிக்கு 53 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஸ்டோக்ஸ் ஒரு கடினமான கேட்சை தவறவிட்டார். அப்போது, இங்கிலாந்து அணி புதிய பந்தை தேர்வு செய்யாமல், பழைய பந்தை பயன்படுத்தி, பந்துவீசினர்.

இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி 2 சிக்சர், 3 பவுண்டரிகளை அடிக்க, அவருக்கு லயான் சிறப்பாக துணை நிற்க, ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு தேவைப்படும் ரன்கள், 20க்கும் கீழ் குறைய, ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. எனினும் லயான், கம்மின்ஸ் ஜோடி கூலாக நின்று, இங்கிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்டனர். கைவசம் 3 ஓவர்கள் எஞ்சி இருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் கைவசம் 2 விக்கெட்டுகள் இருந்த நிலையில், டிக்ளேர் செய்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது.

mykhel


 



Post a Comment

0 Comments