Ticker

6/recent/ticker-posts

Ad Code



அமெரிக்காவில் திரையரங்கிற்குள் நுழைந்து சோளப்பொரியைத் திருடி தின்ற மான்

அமெரிக்காவின் அலாஸ்கா (Alaska) மாநிலத்திலுள்ள திரையரங்கு ஒன்றில் மான் நுழைந்ததோடு நிறுத்திவிடாமல் அங்கிருந்த சோளப்பொரியையும் தின்றது.

அந்த வேடிக்கையான சம்பவம் கெனாய் (Kenai) திரையரங்கில் நடந்தது.

 


திரையரங்கின் வாசற்கதவு திறந்திருந்ததால் மான் உள்ளே
நுழைந்து சோளப்பொரியைத் தின்றது.

அங்கு வேலை செய்துகொண்டிருந்த பெண்ணை அது ஒன்றும் செய்யவில்லை.

சோளப்பொரியை உண்ட மகிழ்ச்சியில் அது திரையரங்கை விட்டு வெளியேறியது.

"சோளப்பொரியின் வாசனை அதனைச் சுண்டி இழுத்திருக்கும். திரையரங்குக்கு வரும் அனைவரையும் அதன் வாசனை ஈர்க்கக்கூடியதுதான்," எனத் திரையரங்கின் மேலாளர் சொன்னார்.

மான் சோளப்பொரியைத் தின்றதாகக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இணையவாசிகள் பலர் கருத்துகளைத் தெரிவித்தனர்.

"இது ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதுதான். ஆனால் அது மிகவும் நிதானமாக நுழைந்ததையும் வெளியேறியதையும் பார்க்க வேடிக்கையாக உள்ளது"

"அதன் அருகே செல்லாமல் இருப்பது வரைக்கும் நல்லது!"
mediacorp
ஆதாரம் : AGENCIES


 



Post a Comment

0 Comments