
ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 386 ரன்கள் விளாசியது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 7 ரன்கள் முன்னிலை பெற்றது. 2ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி பிரம்மாண்ட ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் செஷனிலேயே ஆஸி.யை ஆல் அவுட் செய்தது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா 126 ரன்களுடன் களத்தில் அபாயகரமான வீரராக பார்க்கப்பட்டார். இவரை வீழ்த்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் உலகத்தரம் வாய்ந்த ஃபீல்ட் செட் ஒன்றை அமைத்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஸ்லிப் திசையில் உள்ள ஃபீல்டர்களை நீக்கிவிட்டு, அனைத்து வீரர்களையும் கவாஜா முன்பாக அணி வகுத்தார்.
சில்லி மிட் ஆன், சில்லி மிட் ஆஃப், பாய்ண்ட், கல்லி என்று அனைத்து திசைகளிலும் 6 ஃபீல்டர்களையும் அணிவகுக்க செய்தார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் கவாஜாவுக்கு எப்படியான ஃபீல்ட் செட் அமைத்தால் அழுத்தம் ஏற்படுமோ, அப்படியான ஃபீல்டர்களை பென் ஸ்டோக்ஸ் அமைத்தார். இதனால் களத்தில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் ராபின்சன் பந்துவீசினார். கவாஜா பந்தை தொட்டாலே கேட்ச் பிடிக்க வீரர்கள் தயாராக இருந்த நிலையில், ராம்பின்சன் அசாத்திய யார்க்கர் ஒன்றை வீசினார். அந்த தவறவிட்ட கவாஜா, போல்டாகி 141 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
இது ராபின்சனுக்கு கிடைத்த விக்கெட் என்பதை விடவும், பென் ஸ்டோக்ஸ் ஃபீல்ட் செட்டிற்கு கிடைத்த விக்கெட் என்றே கூறலாம். இதற்காக ரசிகரக்ள் பென் ஸ்டோக்ஸ் கேப்டன்சியை புகழ்ந்து
வருகின்றனர்.
mykhel
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments