Ticker

6/recent/ticker-posts

Ad Code



ரவூப் ஹக்கீமின் பொய் புலம்பலும்...! ஜம்இய்யதுல் உலமாவின் அதிரடி அறிக்கையும்!(VIDEO)




 






சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சியொன்றில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் "நீதியமைச்சினால் புதிதாக திருத்தப்பட்டுள்ள முஸ்லிம் விவாக விவாகரத்து திருத்தச் சட்டமூலத்தில், பெண்களை காதி நீதிபதிகளாக நியமிக்க ஜம்இய்யதுல் உலமா ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த கருத்து சமூக வலைத்தளங்களில் இன்று 17/06/2023 பரவியதையடுத்து, உடனடியாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எந்தவித தாமதமுமில்லாமல் அவ்விடயத்தில் தனது நிலைப்பாட்டை தெளிவு படுத்திய மறுபறிக்கையை சமூக வலைதளங்களில் பல வழிகளில் மூலமாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தியது. 

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இத்துணிச்சல் மிகுந்த நடவடிக்கைக்கு ஶ்ரீலங்கா ஷரீஆ கவுன்சில் மற்றும் தேசிய உலமா பேரவையின் உலமாக்கள், உறுப்பினர்கள் மற்றும் #strengthenMMDA வின் சட்டத்தரணிகள் தனது மனமார்ந்த  நன்றிகளை  தெரிவித்துக் கொள்கிறார்கள்.    
                                                        


 



Post a Comment

0 Comments