Ticker

6/recent/ticker-posts

Ad Code



கோவையில் தமிழ்நாடு கவிஞர்கள் கலை இலக்கியச் சங்கம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்


18-06-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9-00 மணிக்கு தமிழ் மொழியை வாழ்த்தி, மாபெரும் உலக சாதனை நிகழ்வுக்காக., "ஆயிரம் கவிஞர்கள் -ஆயிரம் கவிதைகள்" எனும் தலைப்பில் ஒரு கலந்தாய்வுக் கூட்டம்., கோவை ரயில் நிலையம் எதிரில், கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் இனிதே நடைபெற்றது.

 

விழாவிற்கு உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கவிஞர் வீரப்பனார் தலைமை தாங்கினார்.

மனிதநேய மாமணி க.வேலுச்சாமி, வாழும் மணிமேகலை கோப்பெருந்தேவி, தமிழ் நாட்டரசின் திருவள்ளுவர் விருதாளர், தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க.அன்வர் பாட்சா, கவிஞர் முகில் தினகரன், கவிஞர் தூரல் லோகநாதன், கவிஞர் கலையரசன்,கூடலூர் கவிஞர் நாகராசன், கவிஞர் கனகசிவா,மருத்துவ கவிஞர் குணசுந்தரி, தொல்காப்பியச் செம்மல் காளியப்பன், கவிஞர் அன்பு சிவா, கவிஞர் லதா மகேஸ்வரி, கவிஞர் கோவை சேகர், மருதமலைப் புலவர் பிரபாகரன் உள்ளிட்ட 
தமிழ்ச் சான்றோர்கள் பலரும் கலந்தாய்வில் பங்கேற்று தங்களின் கருத்தைக் கூறி இந்நிகழ்வைச் சிறப்பித்தனர்.

திருக்குறள் முரசு முனைவர் எம்.ஜி. அன்வர் பாட்சா அவர்கள் விழாவின் நோக்கம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
விழாக் குழுவினர் சார்பில், சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப் பட்டது.
  
தமிழறிஞர்கள், கவிஞர்கள், புலவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றுச் சிறப்பித்த இந்த நிகழ்வை விழாக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

நிறைவாக நன்றி நவிலலுடன் மதிய உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

வேட்டை நிருபர் 
தமிழ்நாடு 


 



Post a Comment

0 Comments