வியட்நாமில் வியக்கவைக்கும் பாம்புகளின் தோட்டம்..!

வியட்நாமில் வியக்கவைக்கும் பாம்புகளின் தோட்டம்..!


வியட்நாம் நாட்டில் ஒரு அரிய வகை தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் உள்ள மரங்கள் எந்த விதமான பழங்களையோ, காய்களையோ தருவதில்லை. மாறாக அவற்றின் கிளைகளில் பாம்புகள் மட்டுமே நிறைந்துள்ளன. 

ஆம் தோட்டத்தில் பாம்பு, பூச்சிகள் இருந்து நாம் கேள்வி பட்டிருப்போம். இந்த வியட்நாம் தோட்டத்தில் பாம்புகள் பழங்களை போல வளர்க்கப்படுகின்றன.

வியட்நாமின் Trại rần Đồng Tâm என்ற பண்ணை தோட்டத்தில் தான் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. மற்ற பண்ணைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் விளைவிப்பது போல, இங்கு பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. அத்துடன் இந்தப் பண்ணையில் மருத்துவப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு 400-க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் விஷத்தில் இருந்து மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இதனுடன், அவர்களின் விஷத்தை குறைக்க ஆன்டிடோக்களும் தயாரிக்கப்படுகின்றன. டோங் டாம் பாம்புப் பண்ணைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். அவர்களுக்கு பாம்புகளின் தோட்டம் ஒரு ஆச்சரியமான விஷயம்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த தோட்டத்தின் வீடியோக்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை அடைகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இதுபோன்ற தோட்டம் பற்றி தெரியாது அல்லவா. இந்த தோட்டம் ஆராய்ச்சி நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக இது மாறிவிட்டது.

12 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணை தோட்டத்தில் பல வகையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500 பேர் பாம்பு கடித்து சிகிச்சை பெற இந்த பண்ணைக்கு வருகிறார்கள். ஆண்டிடோஸ் மருந்துக்காக இங்கு தினமும் ஆராய்ச்சி நடக்கிறது. பெரும்பாலான பாம்புகளின் விஷத்தை முறிக்க மருந்து தயாரித்துள்ளனர்.


 



Post a Comment

Previous Post Next Post