Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-1௦2


குறள் 872
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை.

 
மாப்ள.. போர்க் கருவிகளை வச்சிருக்க படை வீர்ர்களைக் கூட பகைச்சுக்கிடலாம். ஆனா, பேச்சுத் திறமை இருக்க மேதாவிகளை என்னைக்குமே பகைச்சுக்கிடக் கூடாது மாப்ள. 

குறள் 873
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.

மாப்ள.. ஊர்ல எல்லாரையும் பகைச்சுக்கிட்டு ஒருத்தன் தன்னந் தனியான நின்னாமுன்ன வச்சுக்க.. அவனை ஒரு கூறு கெட்ட கோட்டிக் காரப் பயா ன்னு தான் சொல்லணும் மாப்ள.. 

குறள் 875
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

மாப்ள.. நாம தனியா இருக்கோம். நம்ம எதிரிங்க ரெண்டு அணியா பிரிஞ்சு, ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சுக்கிடுதாங்க. அப்பம் நம்ம என்ன செய்யணும்னா, ஒரு அணியை நமக்கு ஆதரவா வளைச்சுப் போட்டுறனும். புரியுதா மாப்ள. 

குறள் 877
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க

மென்மை பகைவர் அகத்து.

தம்பி... நம்மோட தும்பம் நம்மோடவே இருக்கணும். அதைப்பத்தி தெரியாம இருக்க நம்ம சேக்காளிங்க கிட்ட நாமே சொல்லிறக் கூடாது. அதே மாதிரித் தான் தம்பி, நம்மளோட பலத்தையும், பலவீனத்தையும் பகைவர்களுக்கு தெரியப் படுத்திறக் கூடாது.  

குறள் 921
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

கட்காதல் கொண்டொழுகு வார்.

தம்பி... குடிப் பழக்கம் உள்ளவனுவொளோட பேரு ஊர்ல நாறிப் பொயிரும். இவனுவொ மேல  ஊர்ல எவனுக்கும் பயமே இருக்காது தம்பி ..

(தொடரும்)


 



Post a Comment

0 Comments