Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -11


குறள் 1115 
அனிச்சப்பூக் கால்களையாள் 
பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை.  

ஏங்கநம்ம 
குழந்தையோட ஆசைய  
பாத்தீங்களா!
அனிச்சம்பூக்கள 
காம்ப நீக்காம 
கூந்தல்ல சூடியிருக்கா! 
அந்த எடைதாங்காம 
அவளோட சின்னஇடுப்பு 
ஒடியிற மாதிரி 
தத்தளிக்குதாம் 
வலிக்குதாங்க! 

குறள் 1116 
மதியும் மடந்தை முகம் அறியா 
பதியின் கலங்கிய மீன்.
 
அம்மா! அம்மா! 
வானத்து நட்சத்திர மெல்லாம் ஏம்மா  
அங்கேயும் இங்கேயும் ஓடுது? 
அதுவாடா செல்லம் 
அது  
உன்னோட முகத்துக்கும் 
அந்த நிலாவுக்கும் 
வேறுபாடு தெரியாம 
கலங்கித் தவிக்குது 
களங்கமில்லை 

குறள் 1117 
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் 
போல மறுவுண்டோ மாதர் முகத்து.

ஏம்மா 
என்னோட பேத்தி 
முகத்த பாத்தியா 
அந்த நிலாவுக்கு 
இருப்பதப்போல 
மாசுமறு ஏதேம் 
இருக்கா? 
களங்கமில்லாம 
பளிச்சு  இருக்கு! 
வாடிகுட்டி! 
பாட்டிகிட்டஓடிவா! 
அன்பு வேண்டுமா? 

குறள் 1118 
மாதர் முகம்போல் ஒளிவிட 
வல்லையேல் காதலை வாழி மதி. 

நிலவே! 
என்னை அப்படி 
ஏன்பார்க்கிறாய்? 
என்மகளைப்போல் 
உன்னையும் 
கொஞ்ச  
வேண்டுமா? 
அவள்முகம் போல 
நீயும்  
ஒளிவீசினால் 
என்டைய அன்பு 
உனக்கும் கிடைக்கும்!
நிலவே மாறு 

(தொடரும்)


 



Post a Comment

0 Comments