
சர்க்கரை நோய் சென்ற வாரம் சர்க்கரை நோய் என்றால் என்ன சர்க்கரை நோயிலிருந்து விடுபடுவது எவ்வாறு கேள்விகளுக்கான விடை.

இதோ!!!
சர்க்கரை நோய் என்றால் என்ன?
நமது உடலில் மண்ணீரல் என்ற உறுப்பின் அருகில் கணையம் என்ற உறுப்பு உள்ளது. இந்த உறுப்பில் தான் இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கிறது.

இந்த இன்சுலின் தான் நாம் சாப்பிடக்கூடிய உணவை சக்தியாக மாற்றுகிறது மேலும் அதிகப்படியான குளுக்கோஸை கிளைகோஜன் ஆக மாற்றி கல்லீரலில் சேமித்து வைக்கிறது. மேலும் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை எப்பொழுதும் கட்டுக்குள் வைத்துக் கொள்கிறது.
ஏனெனில் ஏன் சர்க்கரை நோய் வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதன் உறுப்பை பற்றிய செயல்பாடுகளை அறிந்து கொண்டால் மட்டுமே முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
சரி இப்பொழுது சர்க்கரை நோய் என்பது என்ன என்றால்
- நாம் உண்ணும் உணவிற்கு ஏற்ப இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்காமல் இருப்பதும்
- இன்சுலின் வேலைகள் பாதிக்கப்படுவதாலும்
- இன்சுலின் வேலைகள் எவ்வாறு பாதிக்கப்படும் ரத்தத்தின் சர்க்கரையின் அளவு அதிகமாகுதல். எவ்வாறு சர்க்கரையின் அளவு அதிகமாகும் நாம் அதிகப்படியான மாவுச்சத்து அதாவது கார்போஹைட்ரேட்ஸ்களை எடுக்கும் பொழுது .
- ரத்தக்குழாய்கள் பாதிப்படைந்து பழுதடைந்து மற்ற உறுப்புகள் பாதிக்கப்படுவதாலும் சர்க்கரையின் அளவு
- இன்சுலினன் அளவு சரியாக இருந்தாலும் அதன் தன்மை அதாவது வீரியம் குறைந்து இருக்கும்பொழுதும் சர்க்கரை அதிகம் ஆகிறது.

சரி சர்க்கரை அதிகமாக கூடிய காரணங்களை பார்த்து விட்டோம் அடுத்தது நாம் உண்ணும் உணவு பற்றிய அறிவார்ந்த விஷயங்களை பார்க்கலாம்.
நாம் உண்ணும் உணவுகளை எவ்வாறு பிரிக்கலாம்
- கார்போஹைட்ரேட் அதாவது மாவுச்சத்து .
- புரதம் புரோட்டின்
- கொழுப்பு பேட்
- தாது உப்புக்கள் மினரல்ஸ்
- வைட்டமின்ஸ் விட்டமின்ஸ்.
இப்பொழுது நாம் உண்ணும் உணவில் ஐந்து வகை உணவுப் பொருட்களை பார்த்தோம்.
முதலில் கார்போஹைட்ரேட்ஸ் களை பற்றி பார்க்கலாம்

நாம் உண்ணும் உணவில் உள்ள கார்போஹைட்சைகள் அதாவது மாவு பொருட்கள் சிறு குடலில் ஜீரணிக்கப்பட்டு குடல் உறிஞ்சிகளால் குளுக்கோஸாக உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது இந்த கலந்த கலவையானது சர்க்கரையின் அளவை ரத்தத்தில் உறிஞ்ச இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது இந்த ஹார்மோன் நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதாவது குளுக்கோஸை கட்டுக்குள் வைத்துக் கொள்ளும்.
நீங்கள் குளுக்கோஸ் குளுக்கோஸ் என்கிறீர்களே குளுக்கோஸ் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் சர்க்கரை நோய் பற்றிய முழுமையான அறிவை பெற முடியும்.
குளுக்கோஸ் என்றால் என்ன நமது உடல் வேலை செய்வதற்கான ஆற்றல் அதாவது உதாரணமாக ஒரு மோட்டார் சைக்கிள் இயக்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு எவ்வாறு எரிபொருள் தேவைப்படுகிறது அது போல நமது உடல் இயங்குவதற்கு எரிபொருள் தேவை. அந்த எரிபொருள்தான் குளுக்கோஸ்.
நாம் தெரிந்து இருப்போம்
நமது உடல் பல செல்களின் தொகுப்பு ஆகும். எவ்வாறெனில் நாம் தாயின் கருவறைக்குள் செல்லும் பொழுது ஒரே ஒரு செல்லாக செல்கிறோம். அது வெளிவரும் பொழுது பல செல்களாக வளர்ச்சி அடைந்து ஒரு முழு குழந்தையாக வெளிவருகிறது அந்த குழந்தை வளர வளர பல செல்கள் அதாவது 100 அல்லது 200 ட்ரில்லியன் செல்களை கொண்ட ஒரு தொகுப்பாக மனிதனாக மாறுகின்றான். அப்பொழுது அந்த ஒரு செல்லிற்கு தேவையான உணவு என்பது அந்த செல்லினால் உருவாக்கப்படக்கூடிய உணவு ஆற்றலின் மூலம் நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து பெறக்கூடிய குளுக்கோஸ். இந்த குளுக்கோஸின் மூலம்தான் அந்த செல்லுக்கு செல்லில் இருக்கக்கூடிய மைட்டோகாண்ட்ரியா எனும் ஆற்றல் உருவாக்கக்கூடிய சமையலறை என்றும் சொல்லலாம்.
மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம் சந்திக்க உங்களுடன் உங்களுக்காக.

டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).
.gif)



0 Comments